தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சி.ஏ.ஏ.வை ஆதரிப்பதா? தேனியில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல்

Google Oneindia Tamil News

தேனி: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்த அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் கார் மீது தேனியில் இஸ்லாமிய அமைப்பினர் கறுப்புக் கொடியுடன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

லோக்சபாவில் சி.ஏ.ஏ.வை அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் ஆதரித்து வாக்களித்தார். இதற்கு அதிமுகவில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

AIADMK MP Ravindranath Kumars car was attacked by Anti CAA Protestors at Theni.

இருப்பினும் அதிமுகவினர் சி.ஏ.ஏ.வை ஆதரித்து விளக்கம் அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவு-ஆளுநரிடம் 7 தமிழர் விடுதலைக்கான ஒப்புதலை தமிழக அரசு பெற ஸ்டாலின் வலியுறுத்தல்உச்சநீதிமன்றம் உத்தரவு-ஆளுநரிடம் 7 தமிழர் விடுதலைக்கான ஒப்புதலை தமிழக அரசு பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

இதன் ஒரு பகுதியாக தேனியில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் குமார் சென்ற போது இஸ்லாமிய அமைப்பினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது ரவீந்தரநாத் குமாரின் கார் மீதும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியே தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
AIADMK MP Ravindranath Kumar's car was attacked by Anti CAA Protestors at Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X