தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறக்க முடியாத குரங்கணி... 8 மாதத்திற்கு பிறகு மலையேற்றத்திற்கு அனுமதி

Google Oneindia Tamil News

Recommended Video

    கஜா புயல் நிவாரணம், 8 கோடி கொடுத்தார் லாட்டரி மார்டின்!- வீடியோ

    தேனி: தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் 8 மாதத்திற்கு பிறகு மலையேற்றத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.

    கடந்தாண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி குரங்கணி காட்டுப்பகுதியில் டிரக்கிங் செல்ல வந்த சென்னை, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

     allowed to trekking after 8 months in kurangani

    மேலும் உள்ளூர் மக்கள் உதவியுடன், ராணுவ ஹெலிகாப்டரில், படுகாயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து குரங்கணியில் மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மலையேற்றத்திற்கு வனத்துறை தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அழகு கொஞ்சிய குரங்கணி மலையில், பசுமை குறைந்து பாதைகளாக காட்சியளிக்கிறது.

    குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீயால், அங்குள்ள அரிய வகை மரங்கள் பல அழிந்தன. வனத்துறையின் நடவடிக்கையால் ஆங்காங்கே மரக்கன்றுகள் வைக்கப்பட்டு வருகின்றன. குரங்கணியில் முன்பு இருந்ததை விட, தற்போது கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    English summary
    After 8 months, the Forest Department has been given permission for kurangani trekking in theni district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X