தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணை உள்ளத்தோடு பணியாற்றும் அம்மா உணவக ஊழியர்களுக்கு கவுரவம்.. தேனியில் நெகிழ்ச்சி- வீடியோ

Google Oneindia Tamil News

தேனி: கொரோனா தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் கருணை உள்ளத்தோடு பணியாற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகம் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

Recommended Video

    அம்மா உணவக ஊழியர்களுக்கு கவுரவம்.. தேனியில் நெகிழ்ச்சி- வீடியோ

    உலகம் முழுக்க கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    Amma unavagam employees get facilitate in Theni District for their super service

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகம் வழக்கம்போல செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பசியால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனியிலும் அம்மா உணவகம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    Amma unavagam employees get facilitate in Theni District for their super service

    தேனியில் செயல்படும் அம்மா உணவகத்தில், கருணை உள்ளத்தோடும், தாயுள்ளத்தோடும் பணியாற்றும் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு தேனி, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் ராஜமோகன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

     திருச்சியில் ஏழை மக்களுக்கு நிவாரணம் அளித்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி திருச்சியில் ஏழை மக்களுக்கு நிவாரணம் அளித்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி

    மேலும், அவர்களுக்கு தமிழாசிரியர் ஆறுமுகம் எழுதிய நூல்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளை சிதம்பரம், சினிமா பட தயாரிப்பாளர் சுரேஷ் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    English summary
    Hindu Nadar sangam facilitate Amma unavagam employees in Theni District, video is here.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X