தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமா வந்தாங்க.. பேசும் போதே சுட்டாங்க.. ஆண்டிபட்டி துப்பாக்கி சூடு குறித்து அமமுகவினர் விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பணத்தோடு, தபால் ஓட்டும் பறிமுதல்- வீடியோ

    தேனி: ஆண்டிபட்டியில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து அமமுக கட்சியினர் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

    நாடுமுழுக்க முதற்கட்டலோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இதுகுறித்த பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    டமால், டுமீல்.. கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய அமமுகவினர்.. ஆண்டிப்பட்டி களேபரம் டமால், டுமீல்.. கட்டுக்கட்டாக பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய அமமுகவினர்.. ஆண்டிப்பட்டி களேபரம்

    என்ன சோதனை

    என்ன சோதனை

    நேற்று ஆண்டிப்பட்டியில் வருமான வரிசோதனை நடைபெற்றது. ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் சுமார் 1.48 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எல்லாம் 500 ரூபாய் நோட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டது.

    துப்பாக்கி சூடு

    துப்பாக்கி சூடு

    இந்த சோதனைக்கு முதலில் அமமுகவினர் அனுமதி அளிக்கவில்லை. போலீசாரை உள்ளே விடாமல் அமமுகவினர் தடுத்து வந்தனர். அமமுகவினர் தொடர்ந்து இப்படி தடுத்து வந்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கினார்கள். அமமுக அலுவலகத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதில் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    தற்போது இந்த துப்பாக்கி சூடு குறித்து அமமுக கட்சியினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அந்த பகுதியில் அப்போது இருந்த அமமுகவினர் இது குறித்து விளக்கி உள்ளனர். அதில், நாங்கள் எங்கள் தேர்தல் பணிகளை பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது அங்கு தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் வந்தனர். எங்கள் அலுவலகத்தில் சோதனை நடத்த வந்தார்கள்.

    சண்டை செய்தனர்

    சண்டை செய்தனர்

    ஆனால் அவர்கள் எதுவுமே சொல்லாமல் வேகமாக உள்ளே நுழைந்து தேர்தலுக்காக தயார் செய்து வைத்திருந்த பிரச்சார பொருட்களை அப்புறப்படுத்த பார்த்தார்கள். இதனால் நாங்கள் அவர்களை உள்ளே விடவில்லை. கடுமையாக வாக்குவாதம் நடந்தது. நாங்கள் போலீசாரை உள்ளே விடமுடியாது என்று வாக்குவாதம் செய்தோம்.

    துப்பாக்கி சூடு

    துப்பாக்கி சூடு

    ஆனால் உடனே போலீசார் பேசிக்கொண்டு இருக்கும் போதே வானத்தை நோக்கி சுட்டார்கள். நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் அவர்கள் வானத்தை நோக்கி சுட்டார்கள். வரிசையாக 4 முறை வானத்தை நோக்கி போலீசார் சுட்டார்கள். நாங்கள் இதை நினைத்து பார்க்கவில்லை.

    சிலர் ஓடினார்கள்

    சிலர் ஓடினார்கள்

    போலீசார் எங்களையும் சுடுவார்களோ என்று பயமாக இருந்தது. இதனால் அமமுகவினர் சிலர் அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டார்கள். மீதம் இருந்தவர்களிடம் மட்டும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எங்கள் அறையில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து சென்றுவிட்டார்கள் என்று, அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

    English summary
    AMMK party members explain about Aandipatti shoot out by police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X