தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவங்களே வைப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம்.. நாங்க என்ன முட்டாள்களா.. தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பணத்தோடு, தபால் ஓட்டும் பறிமுதல்- வீடியோ

    தேனி: "இவங்களே பணத்தை வெப்பாங்களாம்.. இவங்களே எடுப்பாங்களாம்.. அவ்வளவு பணத்தை அதிமுக இடத்தில் வைக்க நாங்கள் என்ன முட்டாள்களா?" என்று தங்க தமிழ்செல்வன் காரசாரமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

    ஆண்டிபட்டியில் வருமான வரித்துறை கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    ஆண்டிப்பட்டியில் நேற்றிரவு கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய பரபரப்பே நடந்து முடிந்துவிட்டது. ஒரு ரகசிய இடத்தில் அமமுக கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருந்ததாக வருமான வரித்துறைக்கும், தேர்தல் பறக்கும் படையினர் தகவல் வந்தது.

    எனக்கு விரல் நடுங்கும்ல.. தண்ணி அடிச்சாதானே நடுங்காது.. அப்பத்தானே சரியா ஓட்டு போட முடியும்.. ஆஹாஎனக்கு விரல் நடுங்கும்ல.. தண்ணி அடிச்சாதானே நடுங்காது.. அப்பத்தானே சரியா ஓட்டு போட முடியும்.. ஆஹா

    துப்பாக்கி சூடு

    துப்பாக்கி சூடு

    இதையடுத்து, நடந்த வாக்குவாதத்தில்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடும் நிலைமை வந்துவிட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில், ரூ.1.48 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    பேட்டி தரக்கூடாது

    பேட்டி தரக்கூடாது

    இந்த விஷயம் தொடர்பாக தங்க தமிழ்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். நேற்று சாயங்காலமே பிரச்சாரம் முடிந்துவிட்ட நிலையில், எந்த ஊடகத்துக்கும் எந்த வேட்பாளரும் பேட்டி அளிக்கக்கூடாது என்பது விதி. இருந்தாலும், அதை மீறி தங்க தமிழ்செல்வன் சொன்னதாவது:

    சம்பந்தம் இல்லை

    சம்பந்தம் இல்லை

    நேற்று ஆண்டிப்பட்டியில் தேர்தல் அதிகாரிகள் ரூ.1.48 கோடி பணத்தை பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் அந்த பணத்திற்கும், அமமுகவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இது அதிமுகவும் தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்திய நாடகம்தான். துணை முதல்வர் ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள போலீசாரின் ஆட்டம் இங்கு நடக்கிறது.

    முட்டாள்களா?

    முட்டாள்களா?

    பணம் பறிமுதல் செய்யப்பட்ட அந்த வணிக வளாகம் அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது. அவரது பெயர் அமரேஷ். அப்படி இருக்கும்போது அதிமுக இடத்தில் பணத்தை கொண்டு போய் பதுக்க நாங்கள் என்ன முட்டாள்களா?

    உங்களுக்கு அரசியல் தெரியுமா? அப்போ பதில் சொல்லுங்க.. பாஸ் பண்ணிட்டா கெத்துதான்!

    நடவடிக்கை

    நடவடிக்கை

    ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ரூ.150 கோடி அளவுக்கு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தார்.. ஆனா அதைபத்தி தேர்தல் ஆணையத்தில் புகார் சொல்லியும் ஒரு நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் கிடையாது. எங்க மேல கேஸ் போட்டதாலும் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    English summary
    AMMK Candidate Thanga Tamil Selvan slams OPS Son OP Raveendranadh about Cash distribution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X