தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட ரூ.1.48 கோடி அதிமுகவுக்கு சொந்தமானது... அமமுக வேட்பாளர் பல்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பணத்தோடு, தபால் ஓட்டும் பறிமுதல்- வீடியோ

    தேனி: ஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட ரூ.1.48 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    இடைத்தேர்தல் நடக்கும் ஆண்டிபட்டியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக அமமுக அலுவலகத்தில் பதுக்கி வைத்திருந்ததாக ரூ.1.48 கோடி பணத்தை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

    andipatti Ammk candidate jayakumar says Income tax seized 1.48 crores not for ammk money, this is AIADMK Money

    வேலூரில் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெற வேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் கடிதம் வேலூரில் தேர்தல் ரத்து முடிவை திரும்ப பெற வேண்டும்- தேர்தல் ஆணையத்துக்கு கதிர் ஆனந்த் கடிதம்

    முன்னதாக போலீசாரை உள்ளே சென்று சோதனை செய்யவிடாமல் 100க்கும் மேற்பட்ட அமமுகவினர் தடுக்க முயன்றதோடு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் வன்முறையில் ஈடுபவர்களை விரட்டிஅடிக்கும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதன்பின்னர் அவர்களை விரட்டி அடித்தனர். அதன்பின்னரே கட்டுக்கட்டாக சுமார் 94 பண்டல்களில் ரூ.1.48 கோடி பணம் கைப்பற்றியுள்ளதாக வருமானவரித்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில் ஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட ரூ.1.48 கோடி பணம் அதிமுகவுக்கு சொந்தமானது என அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார்.

    அதிமுகவுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் பதுக்கப்பட்டிருப்பததாகவும், தாங்கள்தான் தகவல் கொடுத்தோம் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    இதனிடையே அமமுகவினர் வாக்காளர்களுக்கு தலா ரூ.300 வீதம் கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை தான் கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு ஆதரமாக அமமுகவுக்கு தபால் ஓட்டு போட்டதற்காக ஆவணம் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தனர்.

    English summary
    Income tax seized 1.48 crore in andipatti ammk office, but ammk candidate says this case AIADMK Money
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X