தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரே பய்யா.. இதர் ஆவோ.. மோடி கூட்டத்துக்கு பதில் ராகுல் கூட்டத்தில் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி கூட்டத்துக்கு பதில் ராகுல் கூட்டத்தில் தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்- வீடியோ

    தேனி: தேனி அருகே பிரதமர் மோடியின் கூட்டத்துக்கு போக வேண்டிய ராணுவ ஹெலிகாப்டர் ராகுல் கூட்டத்தில் தவறுதலாக தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு மதுரை வருகிறார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம் தேனி, மதுரை உள்பட நான்கு இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

    பிரதமர் நரேந்திரமோடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், மதுரை வேட்பாளர் ராஜ்சத்யன், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் லோகி ராஜன், பெரியகுளம் தொகுதி வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரித்து நாளை காலை 11 மணிக்கு தேனியில் பிரச்சாரம் செய்கிறார்.

    அடுத்து நம்ம ஆட்சிதான்.. திடீர் உற்சாகத்தில் திமுக!அடுத்து நம்ம ஆட்சிதான்.. திடீர் உற்சாகத்தில் திமுக!

    மோடி பிரச்சாரம்

    மோடி பிரச்சாரம்

    இதற்காக ஆண்டிபட்டி- தேனி சாலையில் எஸ்எஸ்புரத்தில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே பிரதமர் மோடி வந்து இறங்குவதற்காக ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது.

    ராகுல் பிரச்சாரம்

    ராகுல் பிரச்சாரம்

    இதேபோல் தேனி அன்னஞ்சி விளக்கில் தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக அங்கும் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    தரையிறங்கிய ஹெலிகாப்டர்

    தரையிறங்கிய ஹெலிகாப்டர்

    இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்திற்காக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று காலை 11 மணிக்கு மதுரையில் இருந்து தேனி புறப்பட்ட ஹெலிகாப்டர், ஆண்டிபட்டி அருகே இறங்காமல், நேராக தேனி நகரத்துக்குள் வந்து அன்னஞ்சி விளக்கில் ராகுலுக்காக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் தரை இறங்கியது.

    பைலட் அதிர்ச்சி

    பைலட் அதிர்ச்சி

    இந்த தவறு, தரையிறங்கிய பிறகே ஹெலிகாப்டரை ஓட்டி வந்த பைலட்டுக்கு தெரிந்துள்ளது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆண்டிபட்டி -தேனி சாலையில் மோடிக்காக அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்றடைந்தது. மோடியின் கூட்டத்துக்கு வந்த ஹெலிகாப்டர், தவறதலாக ராகுல் பங்கேற்க உள்ள கூட்டத்துக்கு வந்ததால் அங்கு சிறது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    theni election campaign : Army helicopter wrongly landed rahul's helipad in Theni
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X