தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியில் தேர்தலை புறக்கணித்த மலை கிராம மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections: Theni : தேனியில் தேர்தலை புறக்கணித்த மலை கிராம மக்கள்

    தேனி : தேனி மாவட்டம் போடி அருகே மலைக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து அந்த கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

    தமிழகம் மற்றும் புதுவையில் (வேலுரைத் தவிர) 39 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    bodi village people boycott lok sabha election polls today

    மக்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் காலை 7 மணி முதலே ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த தொகுதியான போடி சட்டமன்ற தொகுதியில் ஒரு மலைக்கிராம மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தராததால் மக்களவை தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்திக்கும் முதல் தேர்தல் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்திக்கும் முதல் தேர்தல்

    தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரங்கணி மலைப்பகுதியில் தென்றல் நகர் என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

    இதன் காரணமாக தென்றல் நகரைச் சேர்ந்த 400 வாக்காளர்கள் இன்று தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். இதனால் அங்கு அமைக்கப்பட்ட வாக்கு மையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    English summary
    Theni: bodi hills village people boycott lok sabha election polls today over need basic thinks
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X