அதிமுகவை தொடர்ந்து திமுகவில் மோதல்! ஆலோசனை கூட்டத்தில் அடிதடி! 2 பேர் மண்டை உடைப்பு! பரபர தேனி
தேனி: தேனி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. பேனர் கிழிக்கப்பட்டு உருட்டு கட்டையால் தாக்கியதில் 2 பேரின் மண்டை உடைந்தது.
அதிமுகவில் தற்போது உள்கட்சி பிரச்சனை வெடித்து கிளம்பியுள்ளது. சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இடையே அடிதடி மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. மேலும் தற்போதும் தொடர்ச்சியாக இருதரப்பினர் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது.
ஸ்டாலின் சுற்றுப்பயணம்: 'அந்த மேட்டர் இல்ல’ 3 மாவட்டங்களுக்கு.. தள்ளிப்போனதை கையில் எடுத்த முதல்வர்!
இந்நிலையில் தான் தற்போது தேனி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு பேனர் கிழிக்கப்பட்டு 2 பேரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் திமுக சார்பில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆதரவாளர் ராஜசேகர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதிக்கு இதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் கூட்டத்துக்கான பேனரில் அவரது போட்டோவும் இடம்பெறவில்லை.

கைக்கலப்பு
இதனால் ரத்தினசபாபதியின் ஆதரவாளர்கள் ஆத்திமடைந்தனர். மேலும் அவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கான பேனரை கிழித்து ரகளை செய்தனர். இதற்கு கூட்டத்தை ஏற்பாடு செய்த ராஜசேகரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதனால் கைக்கலப்பு ஏற்பட்டது.

2 பேரின் மண்டை உடைப்பு
இதனால் ரத்தினசபாபதியின் ஆதரவாளர்களும், ராஜசேகரின் ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டனர். அங்கிருந்த அனைத்து பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. உருட்டு கட்டையால் தாக்கியதில் 2 பேரின் மண்டை உடைந்தது. இதனால் ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த அவர்களை போலீசார் மீட்டு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை
காயமடைந்த திமுக நிர்வாகிகள் இரண்டு பேருக்கும் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தேனி வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவினர் இடையே ஏற்பட்ட இந்த கோஷ்டி மோதல், மண்டை உடைப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தின.