திராவிட மாடல்ன்னா "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" மாடல்னு அர்த்தம்! தேனியில் பீஸ்ட் மோடில் முதல்வர்
தேனி: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல்தான் திராவிட மாடல் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் அன்னஞ்சி பைபாஸ் சாலை அருகே ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ 259.82 கோடியிலான திட்டப் பணிகளை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
4 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. ஆளுநர் ரவியின்
இந்த விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நலத்திட்டங்களை வழங்கிவிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கொரோனா தொற்று
அவர் கூறுகையில் கொரோனா தொற்றால் பல மாவட்டங்களுக்கு என்னால் செல்ல முடியவில்லை. தேனி மாவட்டத்தில் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அணை என்றால் வைகை அணை, மலை என்றால் மேகமலை, அருவி என்றால் சுருளி அருவி என தேனி மாவட்டம் அனைத்திலும் சிறப்பு பெற்றது.

ஏழையின் சிரிப்பில்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என அண்ணா கூறியதுதான் என் நினைவுக்கு வருகிறது. நலத்திட்ட உதவிகளை பெற்று நீங்கள் மகிழ்வதை பார்க்கும் போது எனக்கு பூரிப்பாக இருக்கிறது. என் கடன் பணி செய்து கிடப்பதே. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அரசு மருத்துவமனை ரூ 8 கோடி மதிப்பிலும் தரம் உயர்த்தப்படும்.

திராவிட மாடல்
கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளி பேருந்து நிலையம் ரூ7 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தற்போது திராவிட மாடல் தான் நடந்து கொண்டிருக்கிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல்தான் திராவிட மாடல், வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். அதுதான் என்னுடைய மாடல்.

திராவிட மாடல் என்றால் என்ன
அனைத்து துறைகளிலும் சிறந்த தமிழகத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார். திராவிட மாடல் என்றால் என்ன என பலரும் கேட்டு வந்த நிலையில் தான் ஆட்சி நடத்தும் மாடல்தான் திராவிட மாடல் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட போது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... என கூறி ஒரு ஜெர்க் கொடுத்த காட்சி வைரலானது.