தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லட்சுமி".. ஸ்டாலின் கூட்டத்தில் ஆவேசமான பெண்.. ஓபிஎஸ்ஸுக்கு மிரட்டல் விடுத்ததாக.. எஸ்பியிடம் புகார்

ஓபிஎஸ்-க்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

தேனி: "துணை முதல்வருக்கு அறிவு இல்லையா? இந்த பக்கம் அவர் ஓட்டு கேட்டு வந்தால், அடிச்சு விரட்டிடுவோம்.. என் உயிரே போனாலும் பரவாயில்லை.. அவரை கொலையே பண்ணிடுவேன்" என்று லட்சுமி என்ற பெண் திமுக தலைவரிடம் ஆவேசமாக புகார் கூறியிருந்தார்..இதையடுத்து, ஓபிஎஸ்-க்கு கொலை மிரட்டல் விடுத்த லட்சுமி மீது மாவட்ட எஸ்பியிடம் புகார் தரப்பட்டுள்ளது.

Recommended Video

    ஓ.பி.எஸ்-ஸை கொன்றுவிடுவேன்: கொந்தளித்த திமுக பெண் பிரமுகர்... வாபஸ் பெற வைத்த ஸ்டாலின்!

    தேனி, அரண்மனைபுதூர் ஊராட்சியில், 2 நாட்களுக்கு முன்பு திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.. அப்போது பூதிப்புரத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் பேசும்போது, "எங்க பகுதியில் ரோடெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு.

    கமிஷன் வாங்கி சீரமைத்ததால், மூணே மாசத்தில் சேதமாகிவிட்டது. இப்போ மறுபடியும் 'பஞ்சர்' ஒட்டும் வேலை நடக்குது.. திமுக ஆட்சியில் இருக்கும்போது, சிலிண்டர் விலை 400 ரூபாய்.. இப்போ 800 ரூபாய் ஆயிடுச்சு... பாமாயில் 120 ரூபாய் ஆயிடுச்சு.

    முதல்வர்

    முதல்வர்

    வெறும் 100 ரூபாய்க்கு கூலி வேலைக்கு போற எங்களால், எப்படி இதை வாங்க முடியும்? இந்த விலைவாசியை குறைக்கணும்னு துணை முதல்வருக்கு அறிவு இல்லையா? அவர் எங்க ஊர் பக்கம் ஓட்டு கேட்டு வந்தால், அடிச்சு விரட்டிடுவோம்.. ஆனால் அவர் வர்றதே இல்லை.. ஒருவேளை வந்தால், என் உயிரே போனாலும் பரவாயில்லை.. கொலையே பண்ணிடுவேன்" என்று ஆவேசமாக பேசினார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    லட்சுமி இப்படி பேசியதை கேட்டதும் அங்கிருந்தோர் அதிர்ந்து போய்விட்டனர்.. இதையடுத்து ஸ்டாலின் பேசும்போது, உங்களுக்கு எவ்வளவு ஆத்திரம் இருக்குன்னு என்னால் உணர முடியுது.. ஆனால், ஆத்திரத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க.. அது என்ன வார்த்தைன்னு உங்களுக்கே தெரியும்.. ஜனநாயகத்தில் அது முறை கிடையாது.. நீங்க சொன்ன அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக்கறேன்னு சொல்லுங்கள் என்றார்.

     மன்னிப்பு

    மன்னிப்பு

    உடனே லட்சுமி, ''நாங்கள் ரொம்ப வெறுப்பில் இருக்கோம்.. உங்களுக்காக மன்னிப்பு கேட்கறேன். ஆனல் அவருக்காக கேட்க மாட்டேன் என்றார்.. ஆனாலும் ஸ்டாலின் வாபஸ் வாங்குவதாக சொல்லுங்கள் என்று மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தவும், ''சரி, வாபஸ் வாங்கிக்கிறேன்'' என்று லட்சுமி கடைசியாக சொன்னார்.

     துணை முதல்வர்

    துணை முதல்வர்

    திமுக கூட்டத்தில் ஒரு பெண் துணை முதல்வருக்கு இப்படி கொலை மிரட்டல் விடுத்த இந்த சம்பவம் அன்றைய நாள் முழுவதும் தேனியில் பரபரப்பை தந்துவிட்டது.. எனினும், ஸ்டாலின் இதை சாதுர்யமாக கையாண்டு, அந்த பெண்ணை மன்னிப்பு கேட்க வைத்தார் என்றாலும், அதிமுக இதை அப்படி பார்க்கவில்லை. வேண்டுமென்றே அந்த பெண்ணை தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளது. இப்போது மாவட்ட எஸ்பி வரை புகார் சென்றும் உள்ளது.

    பரபரப்பு

    பரபரப்பு

    அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: "பூதிபுரம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த சிவா என்பவரின் மனைவி லட்சுமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துப் பேசினார்... திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் தூண்டுதலில் பேசியதாக சொல்கிறார்.. அதனால் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Complaint about Woman who comment about OPS in DMKs Gramsabha Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X