தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. தேனியில் களமிறங்கிய பல்வேறு அமைப்புகள்.. மக்களுக்கு தொடர் உதவி!

கொரோனா தொற்று பரவலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், விதவைகள், திருநங்கைகள் உள்ளிட்டவர்களுக்கு குரு தட்சணா மூர்த்தி சேவா சங்கம், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

Google Oneindia Tamil News

தேனி: கொரோனா தொற்று பரவலால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், விதவைகள், திருநங்கைகள் உள்ளிட்டவர்களுக்கு குரு தட்சணா மூர்த்தி சேவா சங்கம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. அதேபோல் அங்கிருந்த மக்களுக்கு இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் உதவி செய்தனர்.

கொரோனா தொற்று பரவலால் இந்தியா முழுவதும் உள்ள ஊரடங்கு உத்தரவால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் என உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கே பெரும் சிரமத்தில் உள்ளனர்.

Coronavirus: Few trusts are helping people in Theni during the lockdown

இந்நிலையில் குரு தட்சனா மூர்த்தி சேவா சங்கம் சார்பாக அதன் தலைவர் சரவணன் பெரியகுளம் பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் உள்ளிடோரை கண்டறிந்து அவர்களுக்கு அன்றாட தேவைகளான காய்கறி, அரிசி, மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர்

Coronavirus: Few trusts are helping people in Theni during the lockdown

இன்று பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்டோருக்கு அத்தியவசிய பொருட்களை வழங்கினர். பொருட்களை வழங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடித்தும். முக கசவம் அணிந்தும் அவர்களை வரவைத்து கொடுத்தனர். மேலும் அவர்களை வீடுகளில் தனித்திருந்து அரசு அறிவித்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்து கொரோனாவை விரட்ட அறிவுரை வழங்கினர்.

Coronavirus: Few trusts are helping people in Theni during the lockdown

அதேபோல் இன்று தேனி மாவட்டம் தேனி வட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்து உள்ள ஸ்ரீகெளமாரியம்மன் கோவில் வளாகத்தில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு இந்து எழுச்சி முன்னணி உறுப்பினர்கள் உதவி செய்தனர்.

Coronavirus: Few trusts are helping people in Theni during the lockdown

இந்து எழுச்சி முன்னணியின் தேனி ஒன்றிய செயலாளர் திருமுருகவேல் தலைமையில் மாவட்ட தலைவர் இராமராஜ் மாவட்ட செயலாளர் குரு.அய்யப்பன் ஒன்றிய செயலாளர்கள் கராத்தே நடராஜன் , கணேசன் ஜீ மற்றும் வீரபாண்டி கிளை பொறுப்பாளர்கள் காமேஷ், மணி. பாண்டி, சசிக்குமார், மதன்ராஜன் வசீகரன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு இட்லி வழங்கினர்.

English summary
Coronavirus: Few trusts are helping people in Theni with food and money during the lockdown .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X