தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிர்வாணமாக ஓடிய இளைஞர்.. பாட்டி கழுத்தை கடித்து கொன்று.. தனிமைப்படுத்தப்பட்டதால் விபரீதம்!

தனிமைப்படுத்தப்பட்டவர் கடித்து மூதாட்டி பலியானார்

Google Oneindia Tamil News

தேனி: ஒரே எரிச்சல்.. டென்ஷன்.. மன உளைச்சல்.. ரூமுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டதால் ஆக்ரோஷமாகிவிட்ட இளைஞர் ஒருவர் நடுத்தெருவில் துணிகளை கிழித்து கொண்டு நிர்வாணமாக ஓடியுள்ளார்.. வெறிபிடித்து ஓடியவர், 90 வயது பாட்டியின் கழுத்தை கடித்து கொன்றே விட்டார்.. இந்த சம்பவம் தேனியை மிரள வைத்துள்ளது!

Recommended Video

    தனிமைபடுத்தியதால் விபரீதம்... பாட்டியை கடித்த இளைஞர்

    இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது கொரோனா வைரஸ்.. இது ஒரு தொற்று நோய் என்பதால் அதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு இறங்கி உள்ளது.

    மேலும் கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும்கூட, உடனே மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்தி கொள்ளுமாறும் சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.

    வெளிநாடு

    வெளிநாடு

    முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எல்லாருமே ஏர்போர்ட்டில் செக் செய்யப்பட்டு, பிறகு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். அந்த வகையில், தேனி மாவட்டம் ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் துணி வியாபாரம் செய்கிறார்.. துணி வியாபாரத்திற்காக இலங்கை சென்றுவிட்டு சில தினங்களுக்கு முன்புதான் ஊர் திரும்பியிருந்தார்.

    வருவாய்த்துறை

    வருவாய்த்துறை

    இலங்கையிலிருந்து வந்தவர் என்பதால் உடனே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவருக்கு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார் என எல்லாருமே தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தனர்... அதன்படியே வீட்டிற்குள்ளேயே இளைஞர் முடங்கி கிடந்தார். இப்படி முடக்கி வைத்ததால் இளைஞர் இருந்ததாக கூறப்படுகிறது.. மன உளைச்சலுக்கும் ஆளானார்... ரூமுக்குள்ளேயே முடங்கியிருந்த நிலையில் திடீரென இவர் வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்தார்...தனது டிரெஸ்களை மொத்தமாக கழட்டிபோட்டுவிட்டு, பித்துபிடித்தவர் போல் நிர்வாணமாக ரோட்டில் ஓட ஆரம்பித்தார்.

    90 வயசு பாட்டி

    90 வயசு பாட்டி

    அருகில் இருக்கும் பக்தசேவா என்ற தெருவிற்குள் ஓடிய இளைஞர், ஒரு வீட்டின் முன்பு படுத்திருந்த ஒரு பாட்டியின் கழுத்தை கடித்துவிட்டார்.. அந்த பாட்டி பெயர் நாச்சியம்மாள்.. 90 வயதாகிறது... கழுத்தை இறுக்கி கடிக்கவும், பாட்டிக்கு ரத்தம் கொட்ட தொடங்கியது.. வலியால் கத்தி கூச்சலிட்டார்.. இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.. இளைஞரிடமிருந்து மூதாட்டியை மீட்க முயன்றனர்.. ஆனால் அவர்களையும் இளைஞர் கடிக்க முயன்றார்.. எனினும் அவரை மொத்த பேரும் சேர்ந்து மீட்டுவிட்டனர்.

    கட்டி வைத்தனர்

    கட்டி வைத்தனர்

    படுகாயமடைந்த பாட்டியை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. பின்னர் அந்த இளைஞர் வேறு எங்கும் யாரையும் கடித்து வைத்து விடக்கூடாது என்பதால், அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி வைத்துவிட்டு போலீஸாருக்கு தகவல் சொன்னார்கள் அப்பகுதி மக்கள்... விரைந்து வந்த போலீஸார் மணிகண்டனை மீட்டதுடன், அவர் தனிமைப்படுத்தப்பட்டவர் என்பதால் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தனிமைப்படுத்துதல்

    தனிமைப்படுத்துதல்

    தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தும் வருகின்றனர்... இதனிடையே தீவிர சிகிச்சையில் இருந்த பாட்டி இன்று காலை இறந்துவிட்டார். தனிமைப்படுத்தப்பட்டவர் ஆவேசம் அடைந்து கடித்ததால், பாட்டி உயிரிழந்த சம்பவம் தேனியில் அதிர்ச்சியையும் மேலும் பீதியையும் கிளப்பி உள்ளது. தனிமைப்படுத்தப்படுதல் என்பது ஒரு தண்டனை என்று சிலர் நினைத்து கொள்கிறார்கள்.. அல்லது அவமானமாக நினைக்கிறார்கள்.

    கவுன்சிலிங்

    கவுன்சிலிங்

    உண்மையிலேயே இது தங்கள் உயிரை காப்பதுடன், அடுத்தவர் உயிரையும் காப்பாற்றும் நடவடிக்கை என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.. தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வு தருவது போல, தனிமைப்படுத்துதல் சம்பந்தமான விழிப்புணர்வினையும் நம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகிறது. அதேபோல தனிமைப்படுத்தலின்போது எப்படி அந்நாட்களை எதிர்கொள்வது என்பதற்கான கவுன்சிலிங்கையும் தர வேண்டும். அதனால்தான் பெரும்பாலானோர் முகாமில் இருந்தும், தனிமைப்படுத்துதலில் இருந்தும் தப்பித்து செல்லும் விபரீதம் நடக்கிறது.

    English summary
    coronavirus: 90 years old woman dies after corona affected man biting near theni
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X