• search
தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"உல்லாசம்".. டக்குனு பார்த்தால் பக்கத்திலேயே கணவன்.. அலறிய மனைவி.. கம்பத்தை நிமிரவைத்த சபாஷ் போலீஸ்

Google Oneindia Tamil News

தேனி: கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு கொலை செய்யப்பட்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.. இதற்காக கம்பம் போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்..!!

தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்.. 37 வயதாகிறது.. கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த மாதம் 21-ந்தேதி வேலைக்கு போன இவர் வீடு திரும்பவில்லை... இதனால் பல்வேறு இடங்களில் அவரது குடும்பத்தினர் தேடி தேடி அலைந்தனர்.. ஒரு பிரயோஜனமும் கிடைக்கவில்லை..

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் மர்ம கொலை.. 'ரூம் மேட்' கைது.. போலீஸ் விசாரணை அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் மர்ம கொலை.. 'ரூம் மேட்' கைது.. போலீஸ் விசாரணை

 தேன்மொழி

தேன்மொழி

இதனால் வேறு வழியில்லாமல், அவரது மனைவி தேன்மொழி, கம்பம் தெற்கு போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை தேடி வந்தனர்... மற்றொருபுறம் அவரது செல்போன் நம்பரை ஆய்வு செய்தனர்... அப்போது அவர், அதே பகுதியை நித்யா என்ற பெண்ணிடம் போனில் மணிக்கணக்கில் பேசியிருப்பது தெரியவந்தது... இந்த நித்யா அதே பகுதியை சேர்ந்தவர்.. 25 வயதாகிறது.. இவரது கணவர் வினோத்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். (25)

 நினைவெல்லாம் நித்யா

நினைவெல்லாம் நித்யா

இதனையடுத்து நித்யாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான் நித்யாவுக்கும் பிரகாஷூக்கும் கள்ளக்காதல் இருந்ததை போலீசில் சொன்னார்.. இந்த கள்ளக்காதல் விவகாரம் வினோத்குமாருக்கு தெரிந்துவிட்டதால்தான், பிரகாஷை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் தந்தார்.. இதனையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர்... பிறகு வினோத்குமார் போலீசில் தந்த வாக்குமூலத்தில், "நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த பிரகாஷிடம், என்னுடைய மனைவி நித்யா கடன் வாங்கியுள்ளார். இதனால் அவருக்கும், என்னுடைய மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

 டார்ச்சர் மெசேஜ்

டார்ச்சர் மெசேஜ்

இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது... அதேநேரத்தில் நானும், பிரகாஷூம் ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்போம்.. போதை ஏறியதும் வீட்டுக்கு வந்து நான் படுத்து தூங்கி விடுவேன். நான் தூங்கியவுடன் பிரகாஷ் என்னுடைய வீட்டுக்கு வந்து நித்யாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அப்படி ஜாலியாக இருக்கும்போதெல்லாம் அதை வீடியோவாகவும், போட்டோவாகவும் பிரகாஷ் தன்னுடைய செல்போனில் எடுத்து வைத்து வந்துள்ளார்.. சில சமயம் அதை நித்யாவின் செல்போனுக்கும் அனுப்பி வைப்பார்.. அந்த போட்டோ என் கண்ணில் பட்டுவிட்டது..

 ஆபாச போட்டோ

ஆபாச போட்டோ

அப்போதே நித்யாவை நான் கண்டித்தேன்.. இது எங்களுக்குள் தகராறாக உருவெடுத்தது.. அதனால், 2 பேரும் சில மாதங்களாக பிரிந்திருந்தனர்.. நானும் அதை உண்மை என்று நம்பினேன்.. ஆனால், அதற்கு பிறகு, இவர்கள் 2 பேரின் அந்தரங்க போட்டோவை சோஷியல் மீடியாவில் பிரகாஷ் வெளியிட்டுவிட்டார்.. இதுதான் எனக்கு ஆத்திரத்தை கிளப்பியது.. அப்போதுதான், இவர்கள் 2 பேரும் கள்ளக்காதலை கைவிடவில்லை என்பதும் எனக்கு உறுதியானது.. எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது.. அப்போதே பிரகாஷை பழிவாங்க முடிவுசெய்தேன்.. தன்னுடைய போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டது நித்யாவுக்கும் அதிர்ச்சிதான்..

துணி

துணி

ஆனால், நான் பிரகாஷை பழிவாங்குவது முன்பே நித்யாவுக்கு தெரிந்தும், எனக்கு கொலை செய்வதில் உடந்தையாக இருந்தார். அளவுக்கு அதிகமாகவே நான் குடிப்பது போல நடித்தேன்.. இதை பிரகாஷூக்கு சொல்லி வீட்டுக்கு தந்திரமாக வரவழைத்தார் நித்யா.. வீட்டிற்கு வந்த பிரகாஷிடமும் கதவை தாழிட்டுக் கொண்டு நெருக்கமாக இருப்பது போன்று காண்பித்து கொண்டார்.. அதன்பிறகு அவரது உடலை முல்லைப்பெரியாற்றில் வீச முடிவு செய்தேன். இதற்காக என்னுடைய நண்பரும், கம்பம் என்.கே.பி.கவுடர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவருமான ரமேஷ் என்பவரை உதவிக்காக அழைத்து கொண்டேன்.. நடந்ததையெல்லாம் அவரிடம் சொன்னேன்.. பிரகாஷ் உடலை அந்த ஆட்டோவில் ஏற்றி விட்டு, ரமேஷ் அவரது வீட்டுக்கு சென்று விட்டார். நானும், நித்யாவும் பிரகாஷ் உடலுடன் சின்னமனூர் நோக்கி சென்றோம். பிறகு உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் உடலை வீசி விட்டு வந்து விட்டோம்" என்றார்.

 பைபாஸ் ரோடு

பைபாஸ் ரோடு

ஆனால், நான் பிரகாஷை பழிவாங்குவது முன்பே நித்யாவுக்கு தெரிந்தும், எனக்கு கொலை செய்வதில் உடந்தையாக இருந்தார். அளவுக்கு அதிகமாகவே நான் குடிப்பது போல நடித்தேன்.. இதை பிரகாஷூக்கு சொல்லி வீட்டுக்கு தந்திரமாக வரவழைத்தார் நித்யா.. வீட்டிற்கு வந்த பிரகாஷிடமும் கதவை தாழிட்டுக் கொண்ட நெருக்கமாக இருப்பது போன்று காண்பித்து கொண்டார்.. அதன்பிறகு அவரது உடலை முல்லைப்பெரியாற்றில் வீச முடிவு செய்தேன். இதற்காக என்னுடைய நண்பரும், கம்பம் என்.கே.பி.கவுடர் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவருமான ரமேஷ் என்பவரை உதவிக்காக அழைத்து கொண்டேன்.. நடந்ததையெல்லாம் அவரிடம் சொன்னேன்.. பிரகாஷ் உடலை அந்த ஆட்டோவில் ஏற்றி விட்டு, ரமேஷ் அவரது வீட்டுக்கு சென்று விட்டார். நானும், நித்யாவும் பிரகாஷ் உடலுடன் சின்னமனூர் நோக்கி சென்றோம். பிறகு உத்தமபாளையம் புதிய பைபாஸ் சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் உடலை வீசி விட்டு வந்து விட்டோம்" என்றார்.

கன்பியூஷன்

கன்பியூஷன்

இதையடுத்து, பிரகாஷின் சடலத்தை தேடும் பணி ஆரம்பமானது.. முல்லைப்பெரியாற்றில் உடலை வீசியதால், அதை எப்படி கண்டெடுப்பது என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டது.. கிட்டத்தட்ட இது ஒரு சவாலாகவே இருந்தது. முல்லை பெரியாற்றில் தீயணைப்புத் துறையின் உதவியுடன் போலீஸார் தீவிரமாக தேடி துவங்கினார்.. ஆனால், அப்போது 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.. இதனால், பிரகாஷின் உடலை தேடும் பணி பாதிக்கப்பட்டது... பிறகு, தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டு, அவரது உத்தரவின்பேரில், முல்லைப் பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டது...

 அழுகிய உடல்

அழுகிய உடல்

இதையடுத்து கம்பம் தெற்கு காவல் போலீஸார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உத்தமபாளையத்திலிருந்து வைகை அணை வரை பெரியாற்றில் உள்ள தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரகாஷின் உடலைத் தீவிரமாக தேடி ஆரம்பித்தனர்.. ஆனால், பத்து நாட்களாகியும் ஆற்றுப்பகுதியில் பிரகாஷின் உடல் கிடைக்கவேயில்லை.. தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்ட நிலையில், சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் முல்லைப் பெரியாற்று பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பது தெரிய வந்தது..

 செம்பு + காப்பு

செம்பு + காப்பு

இதற்கு பிறகு பிரகாஷின் மனைவி கனிமொழியை அழைத்து அடையாளம் காட்ட சொன்னார்கள்.. பிரகாஷின் கையில் செம்பு காப்பு அணிந்திருக்கிறார்.. அந்த காப்பு மூலம் அவரது அடையாளத்தை கண்டுபிடித்தனர்.. பிறகு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர் போலீசார்.. ஒரு கள்ளக்காதல் கருமத்துக்காக, ஒரு உயிர் கொலை செய்யப்பட்டதுடன், அந்த உடலை தேட முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.. அதைவிட, 15 நாட்களுக்கு பிறகு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சடலத்தை மீட்டது கம்பம் மக்களிடையே பேசப்பட்டும் வருகிறது.

English summary
Cumbum man who missed for 15 days found in Mullai Periyar river and what happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X