தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கருணாநிதிதான் எல்லாத்துக்கும் காரணம்.. அவர் வழியில் முதல்வர் ஸ்டாலின்".. கனிமொழி பெருமிதம்

ஆலங்குளம் கூட்டத்தில் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்

Google Oneindia Tamil News

தென்காசி: பெண்கள் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கியவர் கருணாநிதி.. பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை உருவாக்கியவரும் கருணாநிதிதான்.. இலவச சமையல் அடுப்பு வழங்கியதும் கருணாநிதிதான்.. அவர் வழியில் திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார் என்று திமுக எம்பி கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன... இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மற்றொரு பக்கம் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை எதிர்கொள்ளவும் தயாராகி விட்டன.. தங்கள் பிரச்சாரங்களையும் கையில் எடுத்து வருகின்றனர்.

'உலகத்திலேயே நாம தான் பெஸ்ட்.. எத்தனை பிரச்சினையை அசால்டா டீல் பண்ணியிருக்கோம்..' அமித் ஷா பெருமிதம்'உலகத்திலேயே நாம தான் பெஸ்ட்.. எத்தனை பிரச்சினையை அசால்டா டீல் பண்ணியிருக்கோம்..' அமித் ஷா பெருமிதம்

 பிரச்சாரம்

பிரச்சாரம்

அந்த வகையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.. அதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, "உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர்கள்... தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சி நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் பாராட்டக்கூடிய ஆட்சியாக திகழ்ந்து வருகிறது.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயம், கொரோனாவின் பிடியில் நம் மாநிலம் சிக்கி கொண்டிருந்தது.. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறது... சில மாதங்களுக்கு முன்புகூட ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை இருந்தது... அதில் இருந்தும் விடுவித்து, பாதுகாப்பான ஒரு மாநிலமாக திமுக ஆட்சி உருவாக்கி உள்ளது.

 லாக்டவுன்

லாக்டவுன்

அதிமுக ஆட்சியில் இதே கொரோனா பிரச்சனையால் முழு லாக்டவுன் போடப்பட்டது.. அப்போது மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்தனர்... ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கியது.. பெண்களுக்கு நகர்ப்புற பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதியை தமிழக முதல்வர் கொண்டுவந்தார்..

 சுயஉதவிக்குழு

சுயஉதவிக்குழு

பெண்கள் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கியவர் கருணாநிதி.. பெண்களுக்கு சுய உதவிக்குழுக்களை உருவாக்கியவரும் கருணாநிதிதான்.. இலவச சமையல் அடுப்பு வழங்கியதும் கருணாநிதிதான்.. அவர் வழியில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்... ஆட்சிக்கு வந்த 4 மாதத்துக்குள் ஆலங்குளத்தில் அரசு கலைக்கல்லூரிக்கு ரூ. 11 கோடி ஒதுக்கியது திமுக அரசு...

 பிரதிநிதிகள்

பிரதிநிதிகள்


இதே கடையம் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் ஒரு கல்லூரி அமைக்க ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது... இப்படி மக்களின் தேவைகள் என்னவென்பதை பார்த்து, அவைகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் என்பவர்கள், அரசு திட்டங்களை மக்களிடம் சேர்ப்பவர்கள்தான்..

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

முதல்வரின் திட்டங்கள் மக்களின் வீட்டுக்கு வந்து சேர உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் மீது அரசு மீது கொண்டுள்ள அக்கறையை புரிந்துகொண்டு செயல்படுபவர்களாக இருக்க வேண்டும்... அரசின் திட்டங்கள் தடையின்றி மக்களை சென்றடைய திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்... திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும்" என்றார்.

English summary
DMK MP Kanimozhis Local body election campaign meeting in Alangulam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X