தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனியில் உருவான சிக்கல்! பேசாம ‘அங்கேயே’ போய்ரலாமா? யோசிக்கும் தங்க தமிழ்ச்செல்வன்! ட்விஸ்டே தான்!

Google Oneindia Tamil News

தேனி : தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் சமுதாய பிரச்சனை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ள நிலையில், இதற்கு காரணம் திமுக நிர்வாகிகள் காரணம் என்பதை உணர்ந்துள்ள தங்கதமிழ் செல்வன், மீண்டும் அதிமுகவுக்கே போய்விடலாமா என சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

Recommended Video

    சொந்த ஊரில் உருவான சிக்கல்! பேசாம ‘அங்கேயே’ போய்ரலாமா? யோசிக்கும் தேனியின் ‘தங்கம்’! ட்விஸ்டே தான்!

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீனாட்சிபுரம் பேரூராட்சியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த 80 சதவீத மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டு காலமாக அந்த‌ பெரும்பான்மை‌ சமூகத்தை ‌சார்ந்த பேபி குருசாமி என்பவர் மீனாட்சிபுரம் திமுக பேரூர் கழக செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

    இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் பெரும்பான்மை ‌வாய்ந்த சமூகத்தினருக்கு எதிரான செயலில் ஈடுபட்டு பேபி குருசாமி என்பவருக்கு எதிராக மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு நபரை முன்னிறுத்தி அவருக்கு ஆதரவு தெரிவித்து மீனாட்சிபுரம் திமுக பேரூர் கழக செயலாளராக நியமிக்க திமுக தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளார்‌

    தமிழகத்திலும் 'மகாராஷ்டிரா' ஆபரேஷன்! திமுக எம்.எல்.ஏக்களிடம் பேரம் - இந்து முன்னணி காடேஸ்வரா பகீர் தமிழகத்திலும் 'மகாராஷ்டிரா' ஆபரேஷன்! திமுக எம்.எல்.ஏக்களிடம் பேரம் - இந்து முன்னணி காடேஸ்வரா பகீர்

    தங்க தமிழ்செல்வன் திமுக

    தங்க தமிழ்செல்வன் திமுக

    மேலும் 80 சதவீதம் வாக்கு வங்கி உள்ள தங்களது சமூகத்தினருக்கு பேரூர் கழக செயலாளர் பதவியை வழங்காமல் குறைந்த வாக்கு வாங்கி உள்ள மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பேரூர் கழகச் செயலாளர் பதவியை வழங்கி இரு சமூகத்தினரிடையே சமூக பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி ‌பெரும்பான்மை பேபி குருசாமி சமூகத்தை சார்ந்த கூட்டத்தை கூட்டி தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.

    கண்டன போஸ்டர்

    கண்டன போஸ்டர்

    இந்தக் கூட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்க தமிழ்செல்வன் சமுதாய அரசியல் செய்வதாகவும், பணம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்து சமுதாய பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்து கொண்டு உள்ளதாகவும், தெரிவித்து கூட்டத்தில் ஒருமனதாக அவருக்கு எதிரான கண்டன தீர்மானங்களையும் இதனை தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 20 ஆண்டு காலமாக பணியாற்றி வரும் பேபி குருசாமிக்கு மீண்டும் திமுக பேரூர் கழக பதவி வழங்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தொண்டர்கள் குமுறல்

    தொண்டர்கள் குமுறல்

    அதிமுக, அமமுக, போன்ற மாற்றுக் கட்சியில் இருந்து வந்த நபர்களுக்கு பதவிகள் வழங்கி அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாகவும், அடிமட்ட தொண்டனாக இருந்து திமுக கட்சியில் உழைத்துக் கொண்டிருக்கும் நபர்களை ஓரம் கட்டும் முயற்சியில் தங்க தமிழ்செல்வன் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். திமுக தலைவர் ஸ்டாலின் சமுதாய பிரச்சனையை தூண்ட நினைக்கும் தங்கத்தமிழன் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக நாங்கள் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனுக்கு கண்டனம் தெரிவிப்போம் என தெரிவித்தனர்.

    கோஷ்டி பூசல்

    கோஷ்டி பூசல்

    அதனைத் தொடர்ந்து இன்று தங்களது கண்டனத்தை மேலும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள முக்கிய இடங்களில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வனை கண்டித்து கண்டன போஸ்டர்களையும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனாட்சிபுரம் மற்றும் போடி பகுதிகளில் திமுகவினரிடையை கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

    யோசனையில் தங்கம்

    யோசனையில் தங்கம்

    இந்நிலையில் இந்த விவகாரங்களுக்கு எல்லாம் பின்னணியில் திமுக நிர்வாகிகலே இருப்பதாக கூறப்படுகிறது, அதாவது அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வந்து திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதவிகள் வழங்கப்பட்டதால் அதிருப்தியில் இருக்கும் திமுக நிர்வாகிகளே தற்போது குறிப்பிட்ட இந்த பகுதி மக்களை தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிராக கிளப்பி விட்டு கண்டன போஸ்டர் ஒட்டும் நிலைக்கு தள்ளி உள்ளதாக அவர் நினைக்கிறார். தற்போது தேனி மாவட்டத்தில் தனது அரசியல் எதிரியாக கருதிய ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் குறைந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை மீண்டும் சந்தித்து அதிமுகவில் இணைந்து விடலாமா என அவர் யோசிப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தற்போது ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் அவ்வாறான முடிவுகளில் அவர் ஈடுபட மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

    English summary
    A condemn resolution has been passed against Theni DMK North District In-charge Thanga Tamilchelvan and censure posters have also been put up. Realizing that the DMK executives are responsible for this, Thanga Tamil Selvan is said to be thinking of going back to the AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X