தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க வண்டியை விற்பனை செய்றீங்களா.. மறக்காம இதை செஞ்சுடுங்க.. பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

தேனி: வாகன ஒப்பந்த பத்திரம் எழுதி இல்லாமல் வாகனத்தை விற்றால் பின்னால் விபத்து அல்லது ஏதேனும் சட்ட விரோத சம்பவங்கள் அந்த வாகனத்தால் நடந்தால் வாகன உரிமையாளர்கள் சிக்கலை சந்திக்க வேண்டியதுவரும் என பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பொதுவாக பழைய வாகனங்களை விற்கும் போது வாகன ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்க வேண்டியது அவசியம். ஆனால் பலர் அதை பின்பற்றுவது இல்லை. இதேபோல் பழைய வாகன விற்பனை நிலையங்களிலும் வாகனத்தை விற்கும் போதும் பொதுமக்கள் வாகன ஒப்பந்த பத்திரத்தை எழுதி வாங்காமல் விட்டுவிடுகிறார்கள். .

அப்படி செய்யாவிட்டால் பின்னாளில் விபத்து அல்லது ஏதேனும் சட்ட விரோத சம்பவங்கள் அந்த வாகனத்தால் நடந்தால் வாகன உரிமையாளர்கள் அபராதம் உள்பட சிக்கலை சந்திக்க வேண்டியது வரும் என்று தேனி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.

தேனி போலீசார்

தேனி போலீசார்

இது தொடர்பாக தேனி மாவட்ட போலீசார் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் மட்டும் பழைய வாகனங்களை விற்கும் சிறு நிறுவனங்கள் அதிகமாக உருவாகி உள்ளன. இந்நிலையில் வாகன விற்பனை ஷோரும் மற்றும் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வாகன உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை வாங்கும் போது வாகன ஒப்பந்த பத்திரம் எழுதி கொடுக்கிறார்கள். பெரும்பாலனவர்கள் எழுதி கொடுப்பதில்லை.

வாங்காமல் விடாதீர்

வாங்காமல் விடாதீர்

பழைய வாகனங்கள் தானே,இதில் என்ன பிரச்சனை என்று நினைத்து பழைய வாகனத்தை விற்றதற்கான வாகன ஒப்பந்தததை விற்றவர்களும் வாங்காமல் விட்டுவிடுகிறார்கள்.

வாகன விற்பனை

வாகன விற்பனை

ஆனால் இந்த வாகனங்கள் அடையாளம் தெரியாத யாரோ ஒருவருக்கு விற்கப்படுகிறது. அந்த நபர் வாகனத்தை இயக்கி கொண்டிருப்பார்.அவர் முழு பணத்தை செலுத்தும் வரை வாகனத்தை விற்பனை செய்த நிறுவனங்களும் வாங்கியவர் பெயருக்கு எழுதி கொடுப்பது இல்லை.

சிக்கல் ஏற்படும்

சிக்கல் ஏற்படும்

இப்படி தேனி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன. வாகனங்கள் வேறு ஒருவரின் பெயரில் இருக்கும். இன்சூரன்சும் இந்த வாகனங்களுக்கு இருப்பது இல்லை.இதனால் இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அல்லது வேறு ஏதாவது சட்ட விரோத செயலில் வாகனம் சிக்கினால் வாகனத்தின் உரிமையாளர் பல லட்சங்களை அபாரதமாக செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மேலும் சிக்கலிலும் சிக்கி தவிக்கிறார்கள்.

எழுதி வாங்குங்க

எழுதி வாங்குங்க

எனவே சிக்கல் வராமல் தடுக்க உங்களை வாகனங்களை விற்பனை நிறுவனங்களுக்கோ, அல்லது தனியார்களுக்கோ எழுதி கொடுக்கும் போது வாகன ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்கி கொள்வது நல்லது. அப்படி செய்தால் வாகனத்தை விற்பனை செய்தவருக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கும்.இதைவிட சிறந்தது என்றால் வாகனத்தை வாங்குபவரின் பெயருக்கு மாற்றிய பின்னரே வாகனத்தை விற்பனை செய்வது எல்லாவற்றையும் விட சிறந்த வழியாகும்" இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

English summary
Theni Police alert that Do not sell the vehicle without a vehicle contract agreement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X