தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் தூக்கிச் சென்று அடக்கம்.. தேனியில் அவலம்

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் கொரோனா வைரஸால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு 2.50 லட்சத்தை தாண்டியது. நாளுக்கு நாள் 5000 முதல் 6000 வரை கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. அதற்கேற்பு டெஸ்டிங்குகளும் அதிகரித்து வருகின்றன.

Elderly woman dies of Corona in Theni

கம்பம் அருகே கூடலூர் அழகுபிள்ளை தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு அண்மையில் கொரோனா உறுதியானது. ஆனால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.

இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்காததால் அவர் நேற்று காலை உயிரிழந்தார். உடலை எடுத்துச் செல்ல நகராட்சிக்கு பல முறை தகவல் கொடுத்தும் அமரர் ஊர்தியோ ஆம்புலன்ஸோ வரவில்லை.

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 16 லட்சம் கட்டணம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை மருத்துவமனை.. பகீர் செய்தி! கொரோனா சிகிச்சைக்கு ரூ. 16 லட்சம் கட்டணம்.. அதிர்ச்சி கொடுத்த சென்னை மருத்துவமனை.. பகீர் செய்தி!

இதையடுத்து தள்ளுவண்டியில் அந்த மூதாட்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. உரிய பாதுகாப்புகளுடன் எடுத்துச் செல்லாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.

English summary
Elderly woman dies of Corona in Theni and her body was burried without any precautionary measure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X