தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும் - ஓபி ரவீந்திரநாத்

    தேனி: நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் என்ன தீர்ப்புக் கொடுத்திருக்கிறார்களோ அதனை மதிக்க வேண்டும் என அதிமுக எம்பியான ஓபி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

    தேனி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்தது. ஆனால் தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

    தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓபி ரவீந்திரநாத் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை 75000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    கேரளாவில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! கேரளாவில் இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

    ஈவிகேஎஸ் இளங்கோவன் மிரட்டல்

    ஈவிகேஎஸ் இளங்கோவன் மிரட்டல்

    ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஓபி ரவீந்திரநாத் எம்பியாக பதவியேற்க கூடாது, அவரது வெற்றிக்கு இடைக்கால தடைவிதிக்ககோரி வழக்கு தொடர்வேன் என தெரிவித்து வருகிறார்.

    எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

    எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

    இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் வருகை தந்தார். அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார்.

    ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்து கேள்வி

    ஈவிகேஎஸ் இளங்கோவன் குறித்து கேள்வி

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஈவிகேஎஸ்.இளங்கோவன் நீங்கள் எம்பியாக பதவி ஏற்க கூடாது என்றும் எம்பியாக பதவிஏற்க கூடாது என்று இடைகால தடை விதிக்க கோரி வழக்கு தொடரபோவதாக தெரிவித்துள்ளாரே என கேள்வி எழுப்பினர்.

    மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்

    மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்

    அதற்கு பதிலளித்த ஓபி ரவீந்திரநாத், தேனி தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் என்ன தீர்ப்பளித்திருக்கிறார்கள், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்,

    குறைகளை தீர்க்க வேண்டும்

    குறைகளை தீர்க்க வேண்டும்

    என்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நான் நன்றி செலுத்தவேண்டும். அவர்களுடைய குறைகளை தீர்க்க வேண்டும். அதுவே எனது எண்ணம் என்று கூறினார் ரவீந்திரநாத்.

    குறைகளை தீர்ப்பதே முதல்பணி

    குறைகளை தீர்ப்பதே முதல்பணி

    மேலும் உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த ரவீந்திரநாத்,
    தேனி நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றிபெற்றிருக்கிறேன், வாக்கு சேகரிக்க சென்றபோது மக்கள் என்னிடம் என்ன சொன்னார்களோ என்ன குறைகளை முன்வைத்தார்களோ அவை அனைத்தையும் நிறைவேற்றுவதே எனது முதல்பணி. அதுவே எனது எண்ணம் என்றார்.

    போடி - மதுரை அகல ரயில்பாதை

    போடி - மதுரை அகல ரயில்பாதை

    உங்களது வெற்றி மட்டுமே விமர்சனமாக்கபட்டுள்ளதே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதனை நான் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவில்லை.
    தாமதமாக நடைபெற்றுவரும் போடி -மதுரை அகலரயில்பாதை திட்டத்தை விரைந்து முடிக்க அதனை பார்வையிட்டு ஆராய்ந்து, மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு எடுத்து சென்று அதனை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பேன்
    என்றார்.

    விவசாயிகளின் குறைகள் - தீர்வு

    விவசாயிகளின் குறைகள் - தீர்வு

    மேலும் தேனியில் குடிநீருக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பேன். தேனி பகுதியில் இன்னும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படாதது குறித்து நடவடிக்கை எடுப்பேன் என ஓபி ரவீந்திரநாத் தெரிவித்தார்.

    English summary
    ADMK MP OP Ravindranathkumar has said, EVKS Elangovan should accept People judgement in the Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X