தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலம் நீச்செல்லாம் இல்லை.. 64 லட்சம் ரூபாய்க்கு கடன்தான் இருக்கு.. இளங்கோவன் டிக்ளேர்

தேனி தொகுதியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈவிகேஎஸ் இளங்கோவனின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியீடு

    தேனி: "எனக்கு விவசாய நிலம் இல்லை.. ஆனா கடன்தான் ரூ.64 லட்சத்துக்கு இருக்கிறது" என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேனி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களம் காண போகிறார். அதனால் நேற்றைய தினம் முக்கிய கட்சி தலைவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள்.

    EVKS Elangovans property Description

    விஐபி தொகுதி தேனி.. முழுமை ரவுண்ட் அப்

    அதன்படி இளங்கோவனும் தேனி மாவட்ட கலெக்டரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தாக்கல் செய்த மனுவில் இருந்து அவரது சொத்து சம்பந்தமான சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அதில், "அசையும் சொத்துகள் என்று மதிப்பிட்டால், என் பெயரில் 2 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரத்து 360 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், என்னுடைய மனைவி பெயரில், 39 லட்சத்து 49 ஆயிரத்து 613 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், கூட்டுக்குடும்பத்தின் பெயரில் 21 லட்சத்து 65 ஆயிரத்து 294 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன.

    மீண்டும் ஒன்றுகூடும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. இன்று செய்தியாளர்கள் சந்திப்பு.. முக்கிய அறிவிப்பு?மீண்டும் ஒன்றுகூடும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. இன்று செய்தியாளர்கள் சந்திப்பு.. முக்கிய அறிவிப்பு?

    என்னிடம் விவசாய நிலம் எதுவும் கிடையாது. ஆனால் மனைவி பெயரில் விவசாய நிலம் இருக்கிறது. என் பெயரில் 3 கோடியே 23 லட்சத்து 98 ஆயிரத்து 465 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. மனைவி பெயரில் 3 கோடியே 81 லட்சத்து 98 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருக்கின்றன.

    எனக்கு 64 லட்சத்து 27 ஆயிரத்து 457 ரூபாய் கடனும், மனைவி பெயரில் 1 கோடியே 94 லட்சத்து 970 ரூபாய் கடனும் உள்ளன" என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    English summary
    EVKS Elangovan has filed the nomination papers as he is contesting in Theni constituency. EVKS's property details have been released now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X