தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு

Google Oneindia Tamil News

தேனி: ஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள். ரூ 5 ஆயிரம் கேளுங்கள் என தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசினார்.

ஓபிஎஸ் மகன்

ஓபிஎஸ் மகன்

அவர் கூறுகையில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும்கட்சியினர் ரூ 500 கொடுத்து வருகிறார்கள். அதை வாங்காதீர்கள். அதற்கு பதிலாக ஓபிஎஸ் மகனிடம் ரூ 5 ஆயிரம் கேளுங்கள்.

மீனு மீனோய்... என்ன மீனும்மா இது.. வாளை மீனா, விலாங்கு மீனா.. கையில் மீனுடன் கலகலக்க வைத்த தமிழிசைமீனு மீனோய்... என்ன மீனும்மா இது.. வாளை மீனா, விலாங்கு மீனா.. கையில் மீனுடன் கலகலக்க வைத்த தமிழிசை

கொள்ளை

கொள்ளை

அவர்கள் கொடுக்கும் பணம் உங்களை ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளையடித்தது. இத்தனை நாள் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றி சம்பாதித்திருக்கிறார்கள்.

அடிப்படை வசதிகள்

அடிப்படை வசதிகள்

எனவே ஆளும் கட்சியிடம் பணத்தை வாங்கிக் கொண்ட
அவர்களுக்கு நாமம் போடுங்கள். பணம் வாங்கி கொண்டு கை சின்னத்தில் வாக்களியுங்கள். நான் வெற்றி பெற்றால் இந்த தொகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என்றார்.

இளங்கோவன் பேச்சு

இளங்கோவன் பேச்சு

ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது, பணம் கொடுக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இளங்கோவன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Theni Congress candidate EVKS Ilangovan says that get money from O.Paneerselvam's son and vote for Congress. Ask him Rs. 5000 per vote instead Rs. 500.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X