தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி!

தேனி மசாலா கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Fire accident at theni Rodel masala company

    தேனி: கண்ணே தெரியல.. சுத்திலும் புகை மண்டலம் அப்பி கிடக்கிறது.. தேனி - போடி ரோடல் மசாலா கம்பெனி ஒன்று பற்றி கொழுந்துவிட்டு எரிவதால்.. அதை அணைப்பதில் பெரும் திண்டாட்டமாக இருக்கிறது. தீயை அணைக்க தண்ணீர் பற்றாமல் வீரர்கள் திணறி வருகிறார்கள்.

    தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் ஈஸ்டன் மசாலா கம்பெனி உள்ளது. இது கேரளாவில் உள்ள தனியாருக்கு சொந்தமானது.

    இங்கு 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். மாதம் பல கோடி ரூபாய்க்கு லாபம் வருகிறது. கேரளாவில் அதிகப்படியாக விற்பனையாக கூடிய மசாலா கம்பெனி இந்த ஈஸ்டன் மசாலா கம்பெனிதான்.

    இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு இங்குள்ள குடோனில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த குடோனில்தான் கம்பெனியின் மூலப்பொருட்கள் வைத்திருப்பார்களாம். இந்த தீவிபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தீ மளமளவென பரவி விட்டது.

    நடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ

     தண்ணீர் வண்டிகள்

    தண்ணீர் வண்டிகள்

    தகவலறிந்து தீயணைப்பு துறையினர் வந்துவிட்டனர். ஆனால், மொத்தமாக தீ பரவியதால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைதவிர, தீயணைப்பு துறையினருக்கு போதுமான தண்ணீர் வண்டிகள் கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

     உயிர் தப்பினர்

    உயிர் தப்பினர்

    கட்டிடத்துக்குள் இருந்து டமால், டிமீல் என பல்வேறு பொருட்கள் வெடித்து சிதறுகின்றன. தகவலறிந்து அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். ஆனால், அவர்களை போலீசார் அருகில் அனுமதிக்கவில்லை. இந்த தீ விபத்தில் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேறி உயிர் தப்பி உள்ளனர்.

     புகை மண்டலம்

    புகை மண்டலம்

    அதனால் தீ வேகமாக எரிந்து கொண்டிருக்கிறது. அந்த பகுதி சுற்றிலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் திண்டாடி வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு வண்டிகளும் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் பல்லவி பல்தேவ்-வும் நேரில் வந்துள்ளார்.

     போராட்டம்

    போராட்டம்

    நிறுவனத்தினர் இன்சூரன்ஸ் செய்து வைத்துள்ளதால் பெரும் பாதிப்பு இருக்காது என்கிறார்கள். எனினும், தீ விபத்தில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான மசாலா மூலப்பொருட்கள் எரிந்து கருகியதாக கூறப்படுகிறது. போலீசார் ஒரு பக்கம், மின்வாரிய ஊழியர்கள் மற்றொரு பக்கம் சம்பவ இடத்தில் முகாமிட்டு வர.. தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடந்து வருகிறது.

    English summary
    massive fire accident in eestern masala factory near theni and more than five fire engines at rescue operation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X