தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்திற்குள் நுழைய போலீஸ்-க்கு அனுமதி மறுப்பு... 2 முறை துப்பாக்கிச் சூடு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பணத்தோடு, தபால் ஓட்டும் பறிமுதல்- வீடியோ

    தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் நுழைய முயன்ற போலீசாரை தடுத்தததால் 2 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து விட்டு, பணப்பட்டுவாடா நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    Firing in Andippatti, Deny permission to Police enter into ammk office

    இந்தநிலையில், ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், தேர்தல் பணிக்காக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அக்கட்சியின் சார்பில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். அதே போன்று, தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தை எதிர்த்து, தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

    Firing in Andippatti, Deny permission to Police enter into ammk office

    இந்த பகுதியில், 2,000 ரூபாய் வரை பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி, அமமுக அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடந்த வந்த போலீசாரை, அமமுக தொண்டர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து, கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    வேலூர் தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவர் அனுமதி பெறப்பட்டது ஏன்? இதுதான் காரணம் வேலூர் தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவர் அனுமதி பெறப்பட்டது ஏன்? இதுதான் காரணம்

    அப்போது, வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், காவலர்கள் துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமில்லை எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மேலும், அமமுக தொண்டர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Deny permission to Police enter the ammk office, Firing in Andippatti
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X