தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகையில் வெள்ளம்.. 5 மாவட்ட மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள எச்சரிக்கை

வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்டத்திற்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்டத்திற்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தேனி: வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், வைகையை சுற்றிய 5 மாவட்டத்திற்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Flood warning for 5 districts due to heavy water flow in Vaigai

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் தேவையை பூரித்து செய்யும் முக்கிய ஆறாக இருக்கிறது வைகை. இந்த நிலையில் மழை காரணமாக கடந்த சில நாட்களாக வைகை வேகமாக நிரம்பி வருகிறது.

முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மற்றும் வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு, மூலவைகையாறு, வருசநாடு ஆகிய நான்கிற்கும் மேற்பட்ட ஆறில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தான் வைகையை வந்தடைகிறது.

முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரிப்பதால் தற்போது வைகையில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.5 மாவட்ட மக்களுக்கும் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

English summary
Flood warning for 5 districts due to heavy water flow in Vaigai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X