கலெக்டருக்கு கொரோனா.. குடியரசு தினவிழாவில் தேசிய கொடி ஏற்றிய மாவட்ட வருவாய் அலுவலர்!
தேனி: கொரோனா காரணமாக கலெக்டரால் கொடியேற்ற முடியாமல் போனதால், வரலாற்றில் முதன்முறையாக தேனி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
72வது இந்திய குடியரசு தினவிழா தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து தேனி மாவட்ட வருவாய் அலுவலர், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்கவிட்டனர்.
இதையடுத்து முதலமைச்சர் பதக்கம் 69 காவலர்களுக்கும் சிறப்பாக பணியாற்றிய 7 காவலர்களுக்கும் என்று மொத்தம் 82 நபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பிறப்பிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரானா தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து தேனி அரசு மருத்துவமனை தனிப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் வரலாற்றில் முதன்முறையாக தேனி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.