தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈவிகேஎஸ் மூத்த அரசியல்வாதி.. அவருக்கு அந்த சந்தோஷத்தை தருவதில் மகிழ்ச்சி.. ஒபிஸ் மகன் பேட்டி

Google Oneindia Tamil News

தேனி: ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த அரசியல்வாதி. என்னை பற்றி விமர்சனம் செய்வது அவருக்கு மகிழ்ச்சி தரும் என்றால், அந்த சந்தோஷத்தை தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தேனி தொகுதி அதிமுக வேட்பாளரும், ஒபிஸ் மகனுமாகிய ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.

தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட பாலசமுத்திரம் மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள வாக்குசாவடியில் இன்று மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை முதல் அமைதியாக நடந்து வரும் இந்த வாக்குப்பதிவினை தேனி தொகுதி வேட்பாளர்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.

if evks elangovan happy to criticises me, no problem, i am also happy : op raveenthranth

அந்த வகையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கும் இடங்களை பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், தமது மகனை வெற்றிபெற வைக்க, ஒபிஎஸ் மோடியின் காலில் விழுந்ததாக குற்றம்சாட்டி கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் நடந்து வரும் மறுவாக்குப்பதிவினை தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், ஈவிகேஎஸ் இளங்கோவனின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.அதற்கு பதிலளித்த ரவீந்திரநாத், "ஈவிகேஎஸ் இளங்கோவன் மூத்த அரசியல்வாதி, பல தேர்தல்களை கண்ட அனுபவம் மிக்கவர். என்னை விமர்சனம் செய்வது அவருக்கு சந்தோஷம் தரும் என்றால், அந்த சந்தோஷத்தை நான் அவருக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்".

குட்டிக்கரணம் அடித்தாலும் சரி... ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வாய்ப்பில்லை... ஈவிகேஎஸ் இளங்கோவன் குட்டிக்கரணம் அடித்தாலும் சரி... ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வாய்ப்பில்லை... ஈவிகேஎஸ் இளங்கோவன்

குச்சனூர் கோயில் கல்வெட்டில் எம்பி என பெயர் பொறிக்கப்பட்டது எனக்கு தெரியாமல் நடந்த சம்பவம், இதுபற்றி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்" என்றார்.

English summary
theni aiadmk candidate op raveenthranth says if evks elangovan happy to criticises me, no problem, i am also happy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X