தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனி தொகுதியில் வென்று மத்திய அமைச்சர் ஆவாரா ஒபிஸ் மகன் 'ஒபிஆர்'?

Google Oneindia Tamil News

தேனி : தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் வென்று ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சராவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி, மே 19ம் தேதி நிறைவு பெற்றது.

இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.வேலூரில் மட்டும் பணப்புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம்! ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா! தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம்! ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா!

கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

நேற்று மாலை இறுதி கட்ட தேர்தல் முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணியே பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என்றும் அதிமுக சில இடங்களையே கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒபிஆர் வெற்றி

ஒபிஆர் வெற்றி

இந்நிலையில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ள தொகுதியாக தேனியை பல கணிப்புகள் கூறியுள்ளன. இதன்படி தேனியில் ஒபிஎஸ் மகன் ஒபி ரவீந்திராத் (அதவாது ஊருக்குள் ஒபிஆர் என அழைக்கிறார்கள்) வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக உறுதியாக அதிமுகவினர் நம்புகிறார்கள்.

ரவீந்திரநாத் அமைச்சர்

ரவீந்திரநாத் அமைச்சர்

தேர்தல் கணிப்புகளின் படி பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் நிச்சயம் அதிமுக அமைச்சரவையில் இடம் பெறும் என நம்பப்படுகிறது. எனவே அப்படி அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றால் துணை முதல்வர் ஒபிஎஸ் மகன் ரவீந்திராத் மத்திய அமைச்சராகவும் வாய்ப்பு உள்ளது என அவரது ஆதரவாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

அதிமுக ஆட்சி தொடருமா

அதிமுக ஆட்சி தொடருமா

மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி வியாழக்கிழமை வெளியாகிறது. அப்போது தான் அதிமுகவினரின் கனவு பலிக்குமா என்பது தெரியும். இதேபோல் அன்றைக்கே 22 தொகுதி தேர்தல் முடிவுகள் வருவதால், அதிமுகவின் ஆட்சி தொடருமா அல்லது திமுக ஆட்சி மலருமா என்பது தெரிந்துவிடும்.

English summary
lok sabha elections 2019: if OPS Son ravindranath win in theni , he may become as central minister
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X