தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்டெர்நெட் இல்லைன்னா என்ன.. நாங்க இருக்கோம்.. மாணவர்களுக்கு உதவும் குரங்கணி போலீசார்.. அசத்தல்

Google Oneindia Tamil News

தேனி: இணையதள வசதி இல்லாத மாணவ, மாணவிகளுக்கு குரங்கணி காவல் நிலையம் சார்பில் கல்வி கற்க உதவி செய்யப்பட்டுள்ளது.

கொரானா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்பு மூலம் மாணவ மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலை கிராமத்தில் இது நாள்வரையில் எந்தவித செல்போன் வசதிக்கான சிக்னல் கூட கிடையாதாம்.

Kurangani Police helps students to learn online education

செல்போன் கோபுரங்கள் எதுவும் இல்லாத நிலையில் இங்குள்ள மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதை மனதில் கொண்டு போடி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் உத்தரவிற்கு இணங்க குரங்கணி மலை கிராம காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர், ராஜசேகர் ஒரு அசத்தல் ஏற்பாடு செய்துள்ளார்.

காவல் நிலையத்தின் முன்பு சாமியானா பந்தல் அமைத்து இப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் கல்வி கற்கும் வசதிக்காக காவல் நிலையத்தில் உள்ள வைஃபை இணையதள வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளார்.

லவ் ஜிகாத்.. மதமாற்றத்திற்கு காதலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- யோகி மாதிரியே பேசும் எடியூரப்பாலவ் ஜிகாத்.. மதமாற்றத்திற்கு காதலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை- யோகி மாதிரியே பேசும் எடியூரப்பா

தற்போது இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்கள் குரங்கணி காவல் நிலையத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள சாமியானாவில் அமர்ந்து காவல் நிலைய வைஃபை உதவியுடன் ஆன்லைன் வகுப்பு பயின்று வருகின்றனர்.

காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதை மாற்றி, மாணவர்களின் நண்பனாகவும் வழிகாட்டியாகவும் குரங்கணி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் டிஎஸ்பிஐயும், எஸ்ஐஐயும் மனதார பாராட்டி வருகின்றனர்

English summary
Kurangani Police Station has assisted students who do not have internet access to study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X