தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிஜிட்டல் இந்தியா.. டிஜிட்டல் இந்தியாதான்யா.. கழுதை & குதிரை மேல் கொண்டு செல்லப்பட்ட ஈவிஎம்கள்!

தேனியில் வாக்கு பதிவு எந்திரங்கள் கழுதை மேல் வைத்து எடுத்து செல்லப்பட்ட சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் வாக்கு பதிவு எந்திரங்கள் கழுதை மேல் வைத்து எடுத்து செல்லப்பட்ட சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. நாளை மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.

Lok Sabha Election 2019: EVM machines transported using Horse and Donkey for second phase

கனிமொழி வீட்டில் ரெய்டு.. தமிழிசை பதில் இதுதான்கனிமொழி வீட்டில் ரெய்டு.. தமிழிசை பதில் இதுதான்

தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களான சென்ட்ரல் முட்டம், ஊரடி, ஊத்துக்காடு பகுதிகளுக்கு பெரிய அளவில் சாலை வசதி கிடையாது. இதில் உள்ளூர் கிராமங்களுக்கு செல்ல பெரியகுளம் வழியாக எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள மலைப்பாதையில்தான் செல்ல வேண்டும்.

இங்கு போக்குவரத்திற்கான சாலை வசதி இல்லாததால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். குதிரைகள் மற்றும் கழுதைகள் மூலமாக வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர் மகேஸ்வரன் தலைமையில் போடி தாலுகா சிறப்புக் காவல் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்றனர்.

Lok Sabha Election 2019: EVM machines transported using Horse and Donkey for second phase

459 வாக்காளர்களுக்கான பேலட் யூனிட் 2, கட்டுப்பாட்டு கருவி 2 , VV PAT ஆகியவைகளை இரண்டு குதிரைகளிலும், கழுதைகளிலும் கொண்டு சென்றனர். அதேபோல் இன்று முதல் நாளை வாக்குப்பதிவு முடியும் வரை இங்கிருந்து செல்லும் வாக்குப்பதிவு அலுவலர் காவல்துறையினர் உட்பட 10 நபர்களுக்கு உணவுப் பொருட்கள் இன்னொரு குதிரையிலும் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக வாக்கு பதிவு எந்திரங்கள் கழுதை மற்றும் குதிரை மேல் வைத்து எடுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

English summary
Lok Sabha Election 2019: EVM machines transported using horse and Donkey for second phase election in Theni.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X