தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனியில் மட்டும் தப்பிய அதிமுக.. மற்ற எல்லா இடங்களிலும் கூட்டணி படுதோல்வி

லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் அதிமுக கட்சி வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

தேனி: லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் அதிமுக கட்சி வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் முடிவுகள் மொத்தமாக தெரிந்துவிடும். இந்த லோக்சபா தேர்தலில் மொத்தம் 300+ இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பாஜக கூட்டணி 350+ இடங்களில் வென்றுள்ளது. இதனால் பாஜக தனிப்பெரும் கட்சியாக இந்த தேர்தலில் உருவெடுத்து உள்ளது.

பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்' பாஜக கூட்டணி வெற்றி பெற காரணம் என்ன? வாஜ்பாய் முன்னாள் உதவியாளர் சொல்லும் முக்கியமான 'பாயிண்ட்'

அதிமுக இல்லை

அதிமுக இல்லை

ஆனால் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தது. இதில் பாஜக ஒரு இடத்தில் கூட தமிழகத்தில் வெற்றிபெறவில்லை.

அதிமுக

அதிமுக

அதே சமயம், தமிழகத்தில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. கோவையில் முன்னிலை வகித்து வந்த பாஜக தற்போது அங்கு தோல்வி அடையும் நிலையில் உள்ளது. சிதம்பரத்திலும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளார்.

செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்! செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!

எத்தனை இடங்கள்

எத்தனை இடங்கள்

இந்த நிலையில் அதிமுகவிற்கு கை கொடுத்து இருக்கும் ஒரே வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமின் மகன் ஓ. பி. ரவீந்திரநாத் மட்டும்தான். அவர் மட்டுமே அதிமுகவிற்கு இந்த தேர்தலில் வெற்றியை தேடி தர போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் பின்னடைவை சந்தித்த இவர் தற்போது முன்னிலையில் உள்ளார்.

எத்தனை வாக்குகள்

எத்தனை வாக்குகள்

45000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் இருக்கிறார். ஓ. பி. ரவீந்திரநாத் தற்போது 2.83 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். காங் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 2.30 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வெறும் 74 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lok Sabha Elections Results 2019: OPR is the only candidate from AIADMK alliance to win in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X