பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்ட பெயிண்டர்.. கல்லையும், கம்பையும் எடுத்த குடும்பம்.. கடைசியில் ஷாக்
தென்காசி: குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு, 12 வயது சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் தந்துள்ளார் பெயிண்ட்டர் கோபால்..!
தென்காசி மாவட்டம் மேல கடையநல்லூர் வேத கோவில் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபால்.. 55 வயதாகிறது.. இவர் ஒரு பெயிண்டர்... இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.. ஒரு மகன் இருக்கிறார்.
நேற்று காலையில் கோபால் கடையநல்லூர் தாலுகா ஆபீசுக்கு எதிரில் உள்ள வீட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றார்...
இஸ்லாமிய சமூகத்திற்கு ஏமாற்றம்; மதத்துடன் எப்படி தொடர்புபடுத்தலாம்; திமுக அரசை சாடும் ஜவாஹிருல்லா!

பெயிண்டர்
சாயங்காலம், கோபால் பணியில் இருந்தபோது, ஒரு இளைஞரும், அவருடைய உறவுக்கார பெண்ணும் அங்கு வந்தனர்.. கோபாலை வெளியே வரவழைத்து வாக்குவாதத்தில் இருவரும் ஈடுபட்டனர். பிறகு திடீரென 2 பேரும் சேர்ந்து கோபாலை சரமாரியாக தாக்கினர்... அப்போதும் ஆத்திரம் தீராமல் அந்த இளைஞர், கீழே கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து கோபால் தலையில் தூக்கி போட்டார்... உடனே அந்த பெண்ணும் தேடிப்பிடித்து ஒரு கம்பை எடுத்து வந்து கோபாலை தாக்கினார்..

பொதுமக்கள்
இதில் பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்... இவ்வளவும் பொதுமக்கள் கண்முன்னாடியே நடந்தது.. ரத்த வெள்ளத்தில் ஒருவர் கொடூரமாக உயிரிழப்பதை பார்த்ததும், பொதுமக்கள் நாலாபக்கம் கதறி, சிதறி ஓடினர்.. உடனடியாக கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது...

சில்மிஷம்
அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக விசாரணையையும் துவக்கினர்.. அப்போதுதான் கோபாலின் விஷயம் வெளியே வந்தது.. 12 வயது சிறுமியின் வீட்டுக்கு ஒருமுறை கோபால் சென்றுள்ளார்... வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கோபால், சிறுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் சென்றுள்ளார். சிறுமியிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார்..

கைது
தன் பெற்றோரிடம் இந்த விஷயத்தை சிறுமி சொல்லவும்தான், சிறுமியின் உறவினர்கள் 2 பேர் கொந்தளித்து இப்படி வந்து கோபாலை கல்லாலும், கம்பாலும் தாக்கி கொன்றது விசாரணையில் தெரியவந்தது... இதையடுத்து, தலைமறைவாகி இருந்த கொலையாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கோபாலை தாக்கியபோது, அங்கிருந்த சிலர் இதை வீடியோ பதிவு செய்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளனர்.. அந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.