தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எம்ஜிஆரின் மறு உருவமே...வாத்தியாரே என ஒட்டப்பட்ட விஜய் போஸ்டர்கள் தேனியில் கிழிப்பு

எம்ஜிஆரின் மறு உருவமே மாஸ்டர் வாத்தியாரே என நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போல் சித்தரித்து தேனியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

தேனி: எம்ஜிஆரை போல் நடிகர் விஜய்யை உருவகப்படுத்தி தேனியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர்கள் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள் அரசியல் தலைவர்களின் ஆதரவாளர்களால் ஒட்டப்படும் சுவரொட்டிகளில் அவ்வப்போது பரபரப்பு தொற்றிக்கொள்ளும் தங்கள் அபிமானிகளின் பிறந்தநாள் திருமணநாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது தமிழகத்திற்கு தலைமை ஏற்கும் வகையில் ஒட்டப்படும் போஸ்டர்களில் மேலும் பரபரப்பு ஏற்படும்.

Master Vijay movie posters torn down is a re-creation of MGR in Theni

மதுரையில் விஜய் ரசிகர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா போல விஜய், சங்கீதாவை சித்தரித்து போஸ்டர் ஒட்டியிருந்தனர். அந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின. தொடர்ந்து பல நாட்களாகவே பல விதமாக மார்பிங் செய்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். விவேகானந்தர் போலவும் காவி உடை அணிவித்து போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

இந்நிலையில் இன்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை போல் சித்தரித்து தேனி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

எம்ஜிஆரின் மறு உருவமே மாஸ்டர் வாத்தியாரே அழைக்கிறது தமிழகம் தலைமையேற்க 2021 உங்கள் வரவை காணும் தமிழகம் வாங்க தலைவா வாத்தி coming என்று அச்சிடப்பட்டு போஸ்டரில் நடிகர் விஜய்யை எம்ஜிஆர் போல் மார்பிங் செய்து ஒட்டப்பட்டிருந்தது.

ரிக்ஷாக்காரன் படத்தில் வருவது போல விஜய் ரிக்ஷா ஓட்டுவது போலவும் எம்ஜிஆர் பின்னால் அமர்ந்திருப்பது போலவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

சசிகலா பற்றியெல்லாம் கவலையில்லை... நாங்கள் எம்ஜிஆர் வழி நடப்பவர்கள் - அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா பற்றியெல்லாம் கவலையில்லை... நாங்கள் எம்ஜிஆர் வழி நடப்பவர்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

இந்த போஸ்டர்கள் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல மாறி விட முடியாது என்று கூறினார். மீசை வைத்தவர் கட்டபொம்மனாகி விட முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது தேனியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை சிலர் கிழித்துள்ளனர். அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர்கள் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

English summary
Posters depicting actor Vijay as MGR have been torn down in Theni. Theni police have registered a case against Vijay fans for pasting a poster without permission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X