தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லட்சுமி" சொன்ன அந்த வார்த்தை.. மிரண்டு போன கூட்டம்.. "நாசூக்காக" கையாண்ட ஸ்டாலின்.. தேனியில் பரபர!

தேனி கிராம சபை கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் லட்சுமி என்ற பெண்ணால், திடீரென ஒரு சலசலப்பு ஏற்பட்டுவிட்டது.. ஆனால், அதை திமுக தலைவர் நாசூக்காக கையாண்டு நிலைமையை கட்டுப்படுத்தினார்.

Recommended Video

    தேனி: ஓ.பி.எஸ்-ஸை கொன்றுவிடுவேன்: கொந்தளித்த திமுக பெண் பிரமுகர்... வாபஸ் பெற வைத்த ஸ்டாலின்!

    திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வரும் மக்கள் கிராம சபை கூட்டம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.. இதுபோன்ற கிராம சபை கூட்டத்தை மீண்டும் முன்னெடுத்து வந்து மக்களிடம் பிரபலப்படுத்தியதில் பெரும்பங்கு கமலுக்குதான் போய் சேர வேண்டும் என்றாலும், திமுக இதை சரியாக கையாண்டு வருகிறது.

    அதேசமயம், சில கூட்டங்களில் சலசலப்புகளும் ஏற்பட்டுவிடுகின்றன.. இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு கோவையில் ஸ்டாலின் கூட்டம் நடத்தும்போது, ஒரு பெண் எழுந்து சரமாரியாக கேள்வி கேட்டது பரபரப்பாகிவிட்டது..

     ஹைலைட்

    ஹைலைட்

    அதுபோலவே, தேனியில் நடைபெற்ற வட்டத்திலும் ஒரு பெண் திடீரென பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.. ஆனால், அந்த நெருக்கடியான நிலையில், அந்த மேடையில் அதை ஸ்டாலின் சூப்பராக சமாளித்ததுதான் ஹைலைட்டே!

    லட்சுமி

    லட்சுமி

    தேனி, அரண்மனைபுதூர் ஊராட்சியில், திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது.. அப்போது பூதிப்புரத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் பேசும்போது, எங்க பகுதியில் ரோடெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு.. கமிஷன் வாங்கி சீரமைத்ததால், மூணே மாசத்தில் சேதமாகிவிட்டது. இப்போ மறுபடியும் 'பஞ்சர்' ஒட்டும் வேலை நடக்குது.. திமுக ஆட்சியில் இருக்கும்போது, சிலிண்டர் விலை 400 ரூபாய்.. இப்போ 800 ரூபாய் ஆயிடுச்சு... பாமாயில் 120 ரூபாய் ஆயிடுச்சு.

     துணை முதல்வர்

    துணை முதல்வர்

    வெறும் 100 ரூபாய்க்கு கூலி வேலைக்கு போற எங்களால், எப்படி இதை வாங்க முடியும்? இந்த விலைவாசியை குறைக்கணும்னு துணை முதல்வருக்கு அறிவு இல்லையா? அவர் எங்க ஊர் பக்கம் ஓட்டு கேட்டு வந்தால், அடிச்சு விரட்டிடுவோம்.. ஆனால் அவர் வர்றதே இல்லை.. ஒருவேளை வந்தால், என் உயிரே போனாலும் பரவாயில்லை.. கொலையே பண்ணிடுவேன் என்று ஆவேசமாகவும், ஆத்திரத்துடனும் பேசினார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதை கேட்டு அங்கிருந்த மொத்த பேருக்கும் தூக்கி வாரிப்போட்டது.. பிறகு ஸ்டாலின் பேசும்போது, உங்களுக்கு எவ்வளவு ஆத்திரம் இருக்குன்னு, எனக்கு புரியுது.. என்னால் உணர முடியுது.. ஆனால், ஆத்திரத்தில் தவறுதலாக ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க.. ஜனநாயகத்தில் அது முறை கிடையாது.. நீங்க சொன்ன அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக்கறேன்னு சொல்லுங்கள் என்றார்.

    வாபஸ்

    வாபஸ்

    உடனே லட்சுமி, ''நாங்கள் ரொம்ப வெறுப்பில் இருக்கோம்.. உங்களுக்காக மனன்னிப்பு கேட்கறேன். ஆனால் அவருக்காக கேட்க மாட்டேன் என்றார்.. ஆனாலும் ஸ்டாலின் வாபஸ் வாங்குவதாக சொல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் தரவும், ''வாபஸ் வாங்கிக்கிறேன்'' என்று லட்சுமி கடைசியாக சொன்னார். அதன்பிறகு கூட்டம் அமைதியாக நடந்தது.

    ஆவேசம்

    ஆவேசம்

    பகிரங்கமாக திமுக கூட்டத்தில் ஒரு பெண் துணை முதல்வருக்கு இப்படி கொலை மிரட்டல் விடுப்பது என்பது மிகப்பெரிய பிரச்சனையாகவும் மாறக்கூடும்.. பல சலசலப்புகளையும் உருவாக்ககூடும்.. ஆனால், ஸ்டாலின் இதை மிக நாசூக்காக கையாண்டார்.. இப்படித்தான் கோவை மீட்டிங்கிலும் ஆவேசத்துடன் பேசிய அந்த பெண்ணை, பாதுகாப்புடன் பத்திரமாக வெளியே அழைத்து செல்லுங்கள் என்று போலீசாரிடம் தெரிவித்தார். ஒரு மீட்டிங் நடந்து முடிப்பதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியது இருக்கிறது போலும்.

    English summary
    MK Stalins Theni Makkal Gram Sabha Meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X