தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'தேவர் சிலை' முன்பு 'தேவர் மகனுக்கு' வரவேற்பு.. கமல் வருகையால் கலகலத்த உசிலம்பட்டி!

Google Oneindia Tamil News

தேனி: உசிலம்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தை நிறுவனர் கமலஹாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி பிரிவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

MNM party office inaugurated by Kamal Haasan in Usilampatti

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரும்,தலைவருமான நடிகர் கமலஹாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் கமலஹாசனுக்கு உசிலம்பட்டி 'தேவர் சிலை' முன்பு கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

MNM party office inaugurated by Kamal Haasan in Usilampatti

இதனால் அங்கு ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டிருந்தனர். ஆனால் பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போலீசார் அனுமதி வழங்காததால் எதுவும் பேசவில்லை. கைகும்பிட்டப்படி சென்றார்.

MNM party office inaugurated by Kamal Haasan in Usilampatti

பின்னர் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் கிராம மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் அனுமதி இல்லாததால் அங்கும் பேசாமல் கையசைத்தபடி சென்றார்.

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்.. ரஜினியை வைத்து பாஜக சினிமா வேண்டுமானால் செய்வார்கள்.. கமல்ஹாசன் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன்.. ரஜினியை வைத்து பாஜக சினிமா வேண்டுமானால் செய்வார்கள்.. கமல்ஹாசன்

தொட்டப்பநாயக்கனூரில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கொடி ஏற்ற அவரது கட்சியினரால் கொடி கம்பம் நடப்பட்டிருந்தது.ஆனால் அனுமதியில்லாமல் நட்டதாகக் கூறி கட்சிக்கொடி கம்பத்தை போலீசார் அகற்றினர்.

MNM party office inaugurated by Kamal Haasan in Usilampatti

'தேவர் மகன்' திரைப்படத்தில் நடித்த பிறகு கமல்ஹாசனுக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு உயர்ந்ததாக திரையுலகில் கூறுவார்கள். தேனி மாவட்டம்.. அதிலும், உசிலம்பட்டி பகுதியும், முக்குலத்தோர் அதிகமாக உள்ள பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
MNM party office has been inaugurated by Kamal Haasan in Usilampatti, in Theni district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X