தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏகே 47 , ஸ்டென் கன், துப்பாக்கி குவியல் குவியலாக பறிமுதல்.. தேனி போலீசை மிரட்டிய அரசியல்வாதி!

தேனியில் அரசியல் பிரமுகர் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கௌரிமோகன்தாஸ் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏகே 47 , ஸ்டென் கன், துப்பாக்கி குவியல் குவியலாக பறிமுதல்-வீடியோ

    தேனி: போடி அருகே பொட்டல்களம் கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்து ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு ஸ்டென் கன், இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு நாட்டுத்துப்பாக்கி, பட்டாக் கத்திகள், வாள், ஈட்டி போன்ற பயங்கர ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பயங்கர ஆயுதங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக கௌரிமோகன்தாஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல் களம் கிராமத்தில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஒரு வீட்டைச் சுற்றிவளைத்து சோதனை நடத்த முயன்ற போது உள்ளே பதுங்கி இருந்த மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர்.

    வீட்டிற்குள் இருந்த ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். அவரை கைது செய்து அந்த வீட்டை சோதனையிட்ட போது இரண்டு சூட்கேஸ்களில் 5 ஏ.கே 47, ஸ்டென் கன், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்ததைக் கண்டு பிடித்தனர்.

    பறிமுதல்

    பறிமுதல்

    கைது செய்யப்பட்ட நபர் கௌரிமோகன்தாஸ் என்பதும் அவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் பத்துக்கு மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களோடு பதுங்கி இருந்து தேனியின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

     10 மொபைல் போன்கள்

    10 மொபைல் போன்கள்

    போடி தாலுகா உதவி காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படையினர் கெளரிமோகன்தாசை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவரது வீட்டிலிருந்து போலீசார் ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு ஸ்டென் கன், இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு நாட்டுத்துப்பாக்கி, பட்டாக் கத்திகள், வாள், ஈட்டி போன்ற பயங்கர ஆயுதங்களையும் 10க்கும் மேற்பட்ட மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டன.

    இரிடியம் கும்பலா

    இரிடியம் கும்பலா

    போலீசார் நடத்திய சோதனையில் கோயில் கோபுர கலசங்களும், பல்வேறு சிலைகளும் கைப்பற்றப்பட்டன. அந்த பொருட்களை கொண்டு செல்லவும் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏகே47.துப்பாக்கிகளை ஆய்வு செய்த போலீஸார், அவை டம்மி துப்பாக்கிகள் என்று கூறியுள்ளனர்.

     கொள்ளையர்கள்

    கொள்ளையர்கள்

    கைது செய்யப்பட்ட கெளரிமோகன்தாஸை போடி தாலுகா காவல்நிலையத்துக்கு அழைத்துவந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பி ஓடிய கொள்ளையர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள்.

    சதித்திட்டம்

    சதித்திட்டம்

    பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்திருப்பது பொது மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்கள் வெறும் கொண்ட கும்பலால் அல்லது யாரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்ட தங்கியிருந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    கேரள கொலையில் தொடர்பா

    கேரள கொலையில் தொடர்பா

    இந்த கும்பலுக்கு கேரளாவில் நடந்த கொலைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள போலீஸாரும் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Police arrested Gowri Mohandas, Politician at the first house over allegations of violating regarding assault weapons AK 47 Machine Gun rifles, Bodi police said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X