தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறையவில்லை.. துணை கண்காணிப்பு குழுவினர் மீண்டும் உறுதி

Google Oneindia Tamil News

தேனி: முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக துணைக் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 26 ம் தேதி அணையின் நீர்மட்டம் 112.70 அடியாக இருந்தபோது ஆய்வு செய்தனர். தற்போது அணையின் நீர்மட்டம் 112.45 அடியாக குறைந்துள்ள நிலையில், பெரியாறு அணையில் துணைக்கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Mullaperiyar Dam is strong, Monitoring Committee Report

முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் மூவர் குழு அமைத்தது. மேலும் அவர்களுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அணையை கண்காணித்து மூவர் குழுவிற்கு அறிக்கை சமர்பித்து வருகின்றனர். இதன் தலைவராக மத்திய நீர் வள ஆணைய செயற்பொறியாளர் சரவண பிரபு உள்ளார்.

அந்த வகையில், அணையில் கசிவுநீர் (சீப்பேஜ் வாட்டர்) அளவு கணக்கிடப்பட்டது. நிமிடத்திற்கு 22.666 லிட்டர் என்ற கசிவுநீர் நேற்றைய நீர்மட்ட அளவான 112.45 அடிக்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனால் அணை பலமாக உறுதியுடன் இருப்பது தெரிகிறது. மேலும் அணையில் 3, 11, 13 ஆகிய மூன்று மதகுகள் இயக்கிப் பார்க்கப்பட்டது. மதகுகளின் இயக்கம் சரியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயிறெல்லாம் எரியுதுங்க.. வீணாக திறந்து விடப்பட்ட 10 லட்சம் லிட்டர் குடிநீர்.. ஜோலார்பேட்டை பரிதாபம் வயிறெல்லாம் எரியுதுங்க.. வீணாக திறந்து விடப்பட்ட 10 லட்சம் லிட்டர் குடிநீர்.. ஜோலார்பேட்டை பரிதாபம்

இதனைத் தொடர்ந்து குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேபி அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவது மற்றும் அணைக்கு மின்சாரம் கொண்டு வருவதற்கான செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

English summary
Monitoring Committee Report that Mullaperiyar Dam is strong
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X