தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

137 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை - கம்பம் பள்ளத்தாக்கு நெல் சாகுபடிக்காக இன்று திறப்பு

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்துள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படு

Google Oneindia Tamil News

தேனி: முல்லை பெரியாறு அணை நீரை நம்பி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை கடந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் வேகம் அதிகரி்த்து இருப்பதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தின் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கரிங்குள் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மிகக்கனமழையால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 137அடியை எட்டியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Mullaperiyar dam Water level at 137 feet;Opening today for irrigation

அணை நீர்மட்டம் 137 அடியை எட்டியுள்ளது. மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணகுமார் தலைமையிலான துணைக் கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு பெரியாறு அணையில் மேற்கொண்டது. அணையில் தற்போதுள்ள நிலவரம் மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது குறித்து இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரியாறு மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டனர். மழையின் அளவு, அணைக்கு நீர்வரத்து மற்றும் தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் 1, 7, 11 ஆகிய ஷட்டர்களை இயக்கி பார்த்தனர்.

அணைப்பகுதியில் உள்ள ஆய்வாளர் மாளிகையில் நடந்த ஆலோசனைக்கூட்ட முடிவில், அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப அதன் கசிவுநீர் துல்லியமாக உள்ளதால் அணை பலமாகவே உள்ளது என இக்குழு தெரிவித்தது. இதன் அறிக்கையை மத்திய நீர்ப்பாசன செயற்பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவுக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.

இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. முல்லை பெரியாறு அணை நீரை நம்பி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

அதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் பாஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி!!அதிமுகவில் சல சலப்பு.. திமுகவுக்கு முழுக்கு.. வலைவிரிக்கும் பாஜக.. சந்துல சிந்து பாடும் அழகிரி!!

ஆண்டுதோறும் முதல் போக சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 115 அடி நீர் மட்டுமே இருந்ததால் பாசனத்திற்காக நீர் திறக்கப்படவில்லை. தற்போது அணை நிரம்பியுள்ளதால் இன்று முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The water level of Mulla Periyar Dam has crossed 137 feet due to continuous rains in Kerala. Water is being released from the Mulla Periyar Dam today for the first paddy cultivation in the Kambam Valley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X