தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரும்பவும் தேனி டாக்டரை காணவில்லையாம்.. இவரும் கைலாசத்துக்கு கிளம்பி போயிட்டாரா.. பரபரப்பு!

பெரியகுளம் டாக்டர் மாயமானதால் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

தேனி: திரும்பவும் தேனி டாக்டரை காணவில்லையாம்.. ரொம்பவும் கஷ்டப்பட்டு ஆசிரமத்தில் இருந்து டாக்டரை மீட்டு வந்த நிலையில், மீண்டும் மாயமாகி இருப்பது பரபரப்பை தந்துள்ளது.. ஒருவேளை இவரும் கைலாசத்துக்கு கிளம்பி போய்விட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் காந்தி.. ஓய்வுபெற்ற அரசு மருந்தாளுநர்.. இவரது ஒரே மகன்தான் மனோஜ்குமார்.. 33 வயதாகிறது.. இவர் ஒரு அரசு டாக்டர்.. வெள்ளளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.

Nithyananda devotee, Periyakulam doctor missing again

நித்யானந்தாவின் பரம சீடர்.. போன வருடம் இவர் தன்னுடைய அக்கா மகள் நிவேதாவுடன் திடீரென மாயமானார். இதனால் பதறி போன குடும்பத்தினர், இவர்களை தேடி வந்த நிலையில், பிடதியில் இருப்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் மீட்க காந்தி அங்கு சென்றார்.. ஆனால், ஆசிரம ஊழியர்கள் இவரை அடித்து விரட்டி விட்டதாக தெரிகிறது.

அதனால், ஊருக்கு வந்து மகன், பேத்தியை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட எஸ்பியிடம் புகார் தந்தார்.. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு, 2 பேரும் மீட்கப்பட்டு வந்தனர். மனோஜ்குமாரும், வழக்கம்போல பணியில் போய் சேர்ந்தார். திரும்பவும் மனோஜ் ஆசிரமம் பக்கம் போய்விடக்கூடாது என்பதால், வீட்டில் அடிக்கடி அட்வைஸ் தந்து கொண்டே இருந்தனர்.

இப்போது திடீரென எஸ்.ஆகி உள்ளார்.. கொஞ்ச நாளாகவே நித்யானந்தா பற்றி சொந்தக்காரர்களிடம் பேசி வந்துள்ளார்.. அதனால் பதறி போன காந்தி, திரும்பவும் பெரியகுளம் வடகரை ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார். நித்யானந்தா புதிதாக கைலாசா நாட்டை உருவாக்க இருப்பதால், பலரும் அங்கு கிளம்பி செல்ல முயற்சிக்கும் நிலையில், டாக்டரும் அங்கு சென்றிருக்கலாமோ என்ற சந்தேகம் குடும்பத்தினருக்கு எழுந்துள்ளது.

English summary
samiyar Nithyananda devotee Periyakulam doctor missing again and his father files police complaint
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X