• search
தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'சபலிஸ்ட்'.. எதிரே உள்ளவர்களை நிர்வாணமாக காட்டும் ஸ்பெஷல் கண்ணாடி.. பெரியகுளம் சுடுகாட்டில் பரபரப்பு

Google Oneindia Tamil News

தேனி: சினிமாவில் மட்டுமே கேள்விப்பட்ட ஒரு மாயஜால விஷயம், இன்று நம் தேனியில் நடந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைதாகி உள்ளார்.. இன்னொரு ஆசாமியை போலீசார் தேடி வருகறார்கள்.

1981-ல் டைரக்டர் முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் நெற்றிக்கண்.. இதில் ரஜினிகாந்த் ஒரு சபலபேர்வழியாக நடித்திருப்பார்.

ஒரு காட்சியில் வெளிநாடு சென்று வந்த நண்பர், மாயக்கண்ணாடி ஒன்றை ரஜினிக்கு பரிசாக வழங்குவார்.. அந்த கண்ணாடி, எக்ஸ்ரே திறன் பெற்றது..

கண்ணாடி புடவையில் கலக்கும் ஜூலி..உடைந்து போனது ரசிகர்களின் மனதுகண்ணாடி புடவையில் கலக்கும் ஜூலி..உடைந்து போனது ரசிகர்களின் மனது

 பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா

அதன்காரணமாக ஆடைகள் இன்றி உடம்பை காட்டும் குணம் கொண்டது என்று சொல்வார்.. கண்ணாடி அணிந்து யாரை பார்த்தாலும், அவர்கள் நிர்வாணமாக தெரிவார் என்பார். இந்த கண்ணாடியை வைத்துதான் சரிதாவை பார்ப்பார்.. அதன்பிறகு கதை நகரும்.. அதுபோலவே பாசிலின் பூவே பூச்சூடவா படத்திலும் இதே போல ஒரு கண்ணாடியை வைத்து நதியா எஸ்வி சேகரை சீண்டி விளையாடுவார்.. இதில் நகைச்சுவையாக இந்த மாயக்கண்ணாடி சீன் இடம்பெற்றிருக்கும்..

 நூதன மோசடி

நூதன மோசடி

இப்படி ஒரு கண்ணாடியை வைத்துதான் தேனியில் ஒருவர் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் யுவராஜ்... இவரது நண்பர் அரசமுத்து.. தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள உப்புகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அரசமுத்து.. மதுரையை சேர்ந்த பழைய நாணயங்களை விற்பனை செய்யும் ஒருவர் மூலமாக அரசமுத்து யுவராஜூக்கு பழக்கமாகி உள்ளார். முதலில் போனில் ஆரம்பித்த சாதாரண பேச்சு, நாளடைவில் இறுக்கமான நட்பாகி உள்ளது..

 நிர்வாண தோற்றம்

நிர்வாண தோற்றம்

யுவராஜ் உறவினர்கள் தேனியில் உள்ளதாக கூறப்படுகிறது... ஒருமுறை உறவினர் வீட்டு விசேஷத்துக்கு வரும் போது அரசமுத்துவுடன் யுவராஜுக்கு நேரடியாகவும் பழக்கமும் ஏற்பட்டுள்ளது... இந்நிலையில் தன்னிடம் மாயக்கண்ணாடி ஒன்று இருப்பதாகவும், அதை அணிந்துகொண்டு பார்த்தால், டிரஸ் எதுவுமின்றி நிர்வாணமாக தெரிவார்கள் என்றும் அரசமுத்து யுவராஜிடம் சொல்லி உள்ளார். அந்த கண்ணாடியை இப்போது விற்பனை செய்து வருவதாகவும், வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளவும் என்றும் அரசமுத்து தெரிவித்துள்ளார்.

 மாயக்கண்ணாடி

மாயக்கண்ணாடி

இதைக்கேட்டதும், யுவராஜுக்கு சபலம் வந்துவிட்டது.. அந்த மாயக்கண்ணாடிக்கு விலை எவ்வளவு என்று கேட்கவும், ஒரு லட்சம் ரூபாய் என்று அரசமுத்து சொல்லி உள்ளார்.. அந்த விலைக்கு தனக்கும் மாயக்கண்ணாடி வேண்டும் என்று யுவராஜ் கேட்கவும், பெரியகுளத்தில் வந்து கண்ணாடியை வாங்கி கொள்ளுமாறு அரசமுத்து கூறியுள்ளார்... அதன்படியே மாயக்கண்ணாடி வாங்குவதற்கு கும்பகோணத்திலிருந்து யுவராஜும், அவரது நண்பர்கள் 3 பேரும் பெரியகுளத்திற்கு கார் எடுத்து கொண்டு வந்துள்ளனர்..

 பெரியகுளம் சுடுகாடு

பெரியகுளம் சுடுகாடு

பெரியகுளம் சுடுகாடு அருகே அரசமுத்து தன்னுடைய நண்பர் திவாகர் என்பவருடன் தயாராக காத்திருந்தார்.. கண்ணாடி ஒன்றை யுவராஜிடம் தந்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாயையும் பெற்றுக்கொண்டு அவசர அவசரமாக சென்றுவிட்டார்.. யுவராஜ் உடனே அந்த மாயக்கண்ணாடியை அணிந்து பார்த்தபோதுதான், அது வயசானவர்கள் அணியும் வெறும் கண்ணாடி என்பது தெரியவந்தது.. அத்துடன் தான் படுமோசமாக ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

 தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

இதையடுத்து நண்பர்கள் 4 பேரும் அரசமுத்துவை பின்னாடியே விரட்டி சென்று சுற்று வளைத்து பிடித்தனர்.. அரசுமுத்துவை பிடித்து பெரியகுளம் போலீசிலும் ஒப்படைத்து, புகார் தந்தார் யுவராஜ்.. பெரியகுளம் நகர் போலீசாரும் இதுகுறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில் சம்பந்தமுடைய மற்றொரு நண்பர் திவாகரனை போலீசார் தேடி வருகிறார்கள்.

English summary
Nude Xray glasses selling and arrested one near periyakulam another escaped
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X