தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

12 கிராம மக்களின் நெடுநாள் கனவு.. விவசாயிகள் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் போடி தொகுதி தான் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியாகும். இந்த தொகுதிக்கு உள்பட்ட 12 கிராம மக்கள் நீண்ட நாட்களாக வைத்து வந்த கோரிக்கையான 18ம் கால்வாய் நீட்டிப்பு திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி உள்ள தம்பி நாயக்கன் பட்டி, டி.மீனாட்சி புரம்,ஏரணம்பட்டி, கோனாம்பட்டி, திம்மிநாயக்கன் பட்டி, ஈ.புதுக்கோட்டை, பொட்டி புரம், ராசிங்காபுரம், சின்ன பொட்டி பரம், சிலைமலை, சில்லமரத்து பட்டி,தர்மத்து பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் அனைத்தும் மானாவரி விவசாயமே (வானம் பார்த்த பூமி) நடந்து வருகிறது.

O Panneerselvam fulfilled 18th canal extension project of 12 villagers in bodi

இப்பகுதியை சேர்ந்த மக்கள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் 18 ஆம் கால்வாயை நீடித்து தர வேண்டும் என்று கோரினர். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாயிகள் நிலம் பயன் பெறலாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இதை ஏற்று சுமார் 51 கோடி ரூபாய் செலவில் 18 ஆம் கால்வாயை நீடித்து உதவினார். இந்த பணி 2018ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது அந்த பகுதியில் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

English summary
Theni district Bodi constituency is the own constituency of Deputy Chief Minister O Panneerselvam. He has fulfilled the long awaited 18th canal extension project of 12 villagers in the constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X