தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொந்த ஊரில் அதிக நலத்திட்ட உதவிகள்.. ஒரே நாளில் 10,954 பயனாளிகளுக்கு உதவி... ஒபிஎஸ் அதிரடி

Google Oneindia Tamil News

தேனி : தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் 10,954 பயனாளிகளுக்கு, ரூ.4.51 கோடி நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வழங்கினார்.

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சரும் ஆன ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அவர் 10 ஆயிரத்து 954 பயனாளிகளுக்கு, சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

O Panneerselvam provided welfare assistance of Rs 4.51 crore to 10,954 beneficiaries in Theni

இந்த விழாவில் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க உறுப்பினர்களுக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் வீதம் 70 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், 10 ஆயிரம் ரூபாய் வீதம், 237 பயனாளிகளுக்கு 23 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கினார்.

சென்னைக்கு அருகே எப்படி இருக்கு பாருங்க.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த சூப்பர் அப்டேட்.!சென்னைக்கு அருகே எப்படி இருக்கு பாருங்க.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த சூப்பர் அப்டேட்.!

இதேபோல், விலையில்லா தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 126 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும், தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 76 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 57 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கினார்.

O Panneerselvam provided welfare assistance of Rs 4.51 crore to 10,954 beneficiaries in Theni

முன்னதாக போடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் மற்றும் 2500 ரொக்கம் இதனுடன் சேர்த்து இலவச வேட்டி சேலைகளையும் வழங்கி துவக்கினார். ஜனவரி 4ம் தேதி முதல் அந்தந்த நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு இலவச வேட்டி சேலைகளை பெற்றுக் கொள்ளலாம் என துணை முதல்வர் தெரிவித்தார்.. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், சத்தம் இல்லாமல் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது சொந்த தொகுதியியான போடியில் தீவிரமான களப்பணியில் இறங்கி உள்ளார்.

English summary
Deputy Chief Minister O Panneerselvam provided welfare assistance of Rs 4.51 crore to 10,954 beneficiaries in Theni district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X