தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய திருப்பம்..மீண்டும் ஆவின் தலைவராக பதவியேற்றார் ஓ ராஜா.. தேனியில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓ.ராஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டதற்கு இது தான் காரணமா?- வீடியோ

    தேனி: துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேனி ஆவின் தலைவராக இருந்த நிலையில் அதை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இந்நிலையில் ஓ.ராஜா இன்று மீண்டும் தேனி மாவட்ட ஆவின் தலைவராக பதவி ஏற்றுள்ளார்.

    1965-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை ஆவின் கடந்த ஆண்டு மதுரை தேனி என இரண்டாக பிரிக்கப்பட்டது.

    தேனி ஆவினில் தற்போது 17 இயக்குநர்கள், 474 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளார்கள். மொத்தம் 33,000 பேரிடம் தேனி ஆவின் நிர்வாகம், பால் கொள்முதல் செய்து வருகிறது.

    வட்டிக்கு பணம் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது.. வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய ரஜினி!வட்டிக்கு பணம் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது.. வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய ரஜினி!

    ஓ ராஜா தலைவர்

    ஓ ராஜா தலைவர்

    தேனி ஆவின் தலைவராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டார். 17 இயக்குநர்களும் அப்போது தேர்வு செய்யப்பட்டார்கள்.தேனி என்.ஆர்.டி நகரில் என்ஆர்டி மண்டபம் அருகே வாடகை கட்டிடத்தில் தேனி ஆவின் அலுவலகம் இயங்கி வருகிறது.

    முறைகேடாக தேர்வு

    முறைகேடாக தேர்வு

    தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தேனி பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில் `பொதுக்குழுவை கூட்டி, தலைவர், துணைத்தலைவர் மற்றும் இயக்குநர்களைத் தேர்வு செய்வதே முறை. ஆனால், ஓ.ராஜா, முறைகேடாகத் தன்னை தேனி ஆவின் தலைவராக அறிவித்துக்கொண்டுள்ளார். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இயக்குனர்களும் காலி

    இயக்குனர்களும் காலி

    இந்த வழக்கில் விசாரணைக்கு பின் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமிக்கப்பட்டது செல்லாது என்று அதிரடியாக உத்தரவிட்டது. தேனி ஆவினுக்கு நியமிக்கப்பட்ட 17 இயக்குனர்களின் நியமனத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டது. அதேநேரம் ஆவின் அதிகாரிகள் தற்போதைக்கு இடைக்கால தலைமையை உருவாக்கி நடத்தலாம் என்றும் பின்னர் தேர்தல் நடத்தி முறைப்படி தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவித்தது.

     ஓ ராஜா தலைவராக

    ஓ ராஜா தலைவராக

    இந்த சூழ்நிலையில், இன்று மீண்டும் ஓ.ராஜா, தேனி ஆவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் ஓ ராஜா ஆவின் தலைவராக பதவி ஏற்றுள்ளார். இடைக்கால நிர்வாக குழுவின் தலைவராகவே ஓ ராஜா இப்போது பதவி ஏற்றுள்ளார். அவரையே உறுப்பினர்கள் இன்று தேர்வு செய்தனர் தேர்தல் நடக்கும் வரை ஆவின் தலைவராக ஓ ராஜா தொடருவார் என்றார்கள்.

    English summary
    deputy chief minister O paneerselvam brother O. Raja may be sworn in again as Theni Aavin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X