தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்னல் வேகத்தில் கோரிக்கை மனு மீது நடவடிக்கை.. தேனி தொகுதியை கலக்கும் ஓ.பி.எஸ்.மகன்!

Google Oneindia Tamil News

தேனி: தேனி தொகுதி அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் குமாரின் செயல்பாடுகள் அந்தத் தொகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறதாம்.

கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக வென்ற ஒரே ஒரு தொகுதி தேனி மட்டுமே. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ரவீந்திரநாத் குமார், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை தட்டுத் தடுமாறி அதிரடியாக வென்று எம்பி ஆனார்.

சிங்கிளாக லோக்சபாவுக்குப் போனாலும் கூட சிங்கம் போல முழங்கி அதிர வைத்துக் கொண்டிருக்கிறார். அங்கு மட்டுமல்லாமல் தற்போது தனது தொகுதியிலும் கலக்கிக் கொண்டிருக்கிறாராம் ரவீந்திரநாத் குமார்.

முதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூறாவளி போல செயல்பாடு

சூறாவளி போல செயல்பாடு

தேனி மக்களவை உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்தரநாத் குமார் சனி, ஞ்சாயிற்றுக்கிழமைகளில் தேனி தொகுதியை சுற்றியடித்து வருகிறார். தொகுதி முழுவதும் வலம் வரும் அவர் மக்கள் குறைகளை கேட்டு வருகிறார்.

மின்னல் வேக நடவடிக்கை

மின்னல் வேக நடவடிக்கை

தான் செல்லும் இடங்களில் எல்லாம் முகாம்கள் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு அதிகாரிகளும் எதுக்குடா வம்பு என்கிற வகையில் ஓ.பி.ஆர்.இடும் கட்டளைகளை விழுந்து விழுந்து நிறைவேற்றி வருகின்றனர்.

கலகலக்கும் எம்பி

கலகலக்கும் எம்பி

தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் குமார் எந்நேரமும் கலகலப்பாகவே காணப்படுகிறார். மேலும் தன்னை சந்திக்க வருபவர்களின் ஒரு சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தால் அவர்களிடம் அன்பாக பேசி அனுப்பிவைக்கிறார்.

அன்பால் ஈர்க்கிறார்

அன்பால் ஈர்க்கிறார்

இப்படி அன்பால் அனைவரையும் ஈர்த்தால் மட்டுமே அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என தன்னை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி பஞ்ச் டயலாக்கும் அடிப்பதோடு, யாரையும் கடிந்துகொள்ளாதீர்கள் என அவர்களுக்கு அட்வைஸும் செய்து வருகிறார் ரவீந்தரநாத்குமார்.

English summary
OPS's son and Theni MP Ravindranath Kumar is solving the problems of the people in the Theni constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X