தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மந்தமான நிலையில் மறு வாக்குப்பதிவு... வெறிச்சோடி கிடக்கும் வாக்குச்சாவடிகள்

Google Oneindia Tamil News

தேனி: மறு வாக்குப்பதிவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டாததால், வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. சில இடங்களில், இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்தச் சூழலில், தர்மபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 வாக்குச்சாவடிகள், திருவள்ளூர், கடலூர், ஈரோடு தொகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடந்து வருகிறது.

People are not interested in re-voting, stagnant in Booths

மாதிரி வாக்குப்பதிவு நடத்தும் போது ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்குகளை அழிக்காமல் விட்டது. சில தொகுதிகளில் மின்னணு எந்திரத்தில் பதிவான மாதிரி வாக்குகளையும் விவி பேட்டில் உள்ள துண்டு சீட்டையும் அகற்றாமல் தவறு செய்ததன் காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, 4 தொகுதி இடைத்தேர்தலுடன் 13 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. ஆனால், வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. அதே நேரம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மதியத்திற்கு பிறகு வாக்குப்பதிவு அதிகரிக்க கூடும் என சொல்லப்படுகிறது.

பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா? பிரஸ் மீட்டில் வந்த சிக்னல்.. ஓரம்கட்டப்படும் மோடி.. பிரதமர் பதவிக்கு அடிபோடும் அமித் ஷா?

தேனி வடுகபட்டி 197-வது வாக்குச்சாவடியில் வாகுப்பதிவு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு 20 நிமிடம் தாமதமாக தொடங்கியது. வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.

English summary
Lok sabha Elections : People are not interested in re-voting, stagnant in Booths
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X