தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருட்டுத்தனம் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்- மோடி

Google Oneindia Tamil News

தேனி: திருடர்களையும் திருட்டுத்தனத்தையும் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்தான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இங்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து பேசுகிறார்.

இதற்காக அவர் நேற்று இரவே தமிழகம் வந்துள்ளார். ஆண்டிப்பட்டியில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக மோடி நேற்று இரவு தமிழகம் வந்தார்.

எதிரில் உட்கார்ந்து.. பாதத்தை உள்ளங்கையில் தாங்கி.. நிமிர்ந்து பார்த்தாள் ஜனனி.. பேரானந்தம்! எதிரில் உட்கார்ந்து.. பாதத்தை உள்ளங்கையில் தாங்கி.. நிமிர்ந்து பார்த்தாள் ஜனனி.. பேரானந்தம்!

பிரதமரிடம் ஆசி

பிரதமரிடம் ஆசி

இதையடுத்து தேனி கரிசல்பட்டிவிலக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்ட மேடைக்கு வந்தார். அப்போது ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் பிரதமரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

வளர்ச்சித் திட்டங்கள்

வளர்ச்சித் திட்டங்கள்

இதையடுத்து மோடி பேசுகையில் அன்பான வணக்கம் என தமிழில் பேசத் தொடங்கிய அவர் தொடர்ந்து பேசுகையில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவேன்.

கண்ணியம்

கண்ணியம்

இந்தியாவின் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் திமுக- காங். கூட்டணிக்கு என்னை பிடிக்கவில்லை. ஒவ்வொருவரும் கண்ணியத்துடனும் வளமுடனும் வாழ வேண்டும்.

திருட்டுத்தனம்

திருட்டுத்தனம்

புதிய இந்தியாவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்களின் காவலாளியான நான் உஷாராக இருக்கிறேன். திருடர்கள் மற்றும் திருட்டுத்தனம் செய்யும் எதிர்க்கட்சிகளை பிடிக்கும் காவலாளி நான்.

பாதுகாப்பு விஷயம்

பாதுகாப்பு விஷயம்

தமிழ்நாட்டை வளமான மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் இல்லை.

தீவிரவாதம்

தீவிரவாதம்

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவத்தின் வீரத்தை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. பாகிஸ்தான் பிடியில் சிக்கிய இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை விடுவிக்க முயற்சி எடுத்தோம். அந்த முயற்சியை எதிர்க்கட்சிகள் அவமதித்தன. தீவிரவாதம் , தீவிரவாதிகளை ஒடுக்க எந்த எல்லையும் செய்ய தயாராக உள்ளோம் என்றார் மோடி.

யார் பங்கேற்பு

யார் பங்கேற்பு

தேனி வேட்பாளர் ரவீந்திரநாத், திண்டுக்கல் வேட்பாளர் ஜோதி முத்து, மதுரை வேட்பாளர் ராஜ் சத்யன், விருதுநகர் வேட்பாளர் அழகர்சாமி ஆகியோரை ஆதரித்து மோடி பேசினார். இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், பிரேமலதா, பொன் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

English summary
PM Narendra Modi says that he is people's Chowkidar. He is to catch Opposition party's corruptions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X