தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகி விடும்.. தேனியில் போஸ்டர்.. அதிமுகவில் சலசலப்பு

Google Oneindia Tamil News

தேனி: எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகி விடும் என்று தேனியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    தேனியில் பரபரப்பை ஏற்படுத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக போஸ்டர் - வீடியோ

    அதிமுகவில் அண்மைக்காலமாக போஸ்டர் யுத்தம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது,. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் வெளிப்படையாக அதிகமாக தெரிகிறது.

    யார் முதல்வர் என்பது குறித்து இரு தரப்பினரிடையே அவ்வப்பபோது மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனியில் மீண்டும் போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் - தலைமை உத்தரவை மீறிய ஓ.எஸ். மணியன் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார் - தலைமை உத்தரவை மீறிய ஓ.எஸ். மணியன்

    திருந்தட்டும்

    திருந்தட்டும்

    தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள அரப்படித்தேவன்பட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரில் ‘எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதை படித்த பின்னராவது திருந்தட்டும்' எனும் தலைப்பில் அரசின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு உள்ளார்கள்.

    நாக்கு அழுகி விடும்

    நாக்கு அழுகி விடும்

    பட்டியலிட்டால் கணக்கிலடங்காது. மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகி விடும். என்றும் எடப்பாடியாரோடு.. மீண்டும் எடப்பாடி.. வேண்டும் எடப்பாடி... இவன் நேதாஜி சுபாஷ் சேனை' என கூறப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில் பெரிய அளவில் எடப்பாடி பழனிசாமி படமும் சிறிய அளவில் ஓ.பன்னீர்செல்வம் படமும் இடம் பெற்று இருந்தது.

    அதிமுகவில் சலசலப்பு

    அதிமுகவில் சலசலப்பு

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓபிஎஸ்சை முதல்வர் என குறிப்பிட்டு, தேனி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரால் தேனி மாவட்ட அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதிமுக போஸ்டர்

    அதிமுக போஸ்டர்

    அதிமுகவில் நடந்து வரும் இந்த போஸ்டர் யுத்தங்கள், சட்டசபை தேர்தல் நெருங்கும் போது அதிகரித்தால் அக்கட்சிக்கு பின்னடைவை தரும் என்பதால், அதற்குள் இந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. இதனிடையே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக தேர்தலுக்கு முன்பு தெரிவிக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

    English summary
    A poster pasted in Theni in support of Chief Minister Edappadi Palanisamy has once again caused a stir in the AIADMK. poster claims that criticizing Edappadi would rot the tongue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X