தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடம்பெல்லாம் ரத்தம்.. கீறல்கள்.. வாய் பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி நாசம்!

மனநலம் குன்றிய 7 வயது குழந்தையை நாசம் செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    வாய் பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி நாசம்!-வீடியோ

    தேனி: சிறுமிக்கு உடம்பெல்லாம் வழிந்தது ரத்தம்.. எங்கு பார்த்தாலும் கீறல்கள்.. மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயது மகளின் நிலைமையை பார்த்து பதறினார் பெற்ற தாய்.. குழந்தையை நாசம் செய்தவரை கைது செய்ய வேண்டும் என்று பல அமைப்புகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.

    தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் அந்த ஏழை தாய். 7 வயதில் ஒரு பெண் குழந்தை. மனநலம் பாதிக்கப்பட்டவள்.

    அத்துடன் வாய் பேசவும் முடியாது. அதனால், மகளை தேனியில் உள்ள ஒரு மனநல காப்பகத்துக்கு தினமும் ஆட்டோவில் அழைத்துச்செல்லப்படுவது வழக்கம்.

    பொறுப்புள்ள குடிமகன் நான்.. ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன்- ப.சிதம்பரம்பொறுப்புள்ள குடிமகன் நான்.. ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன்- ப.சிதம்பரம்

    காப்பகம்

    காப்பகம்

    அப்படித்தான் கடந்த 19-ந்தேதி சிறுமி காப்பகத்துக்கு சென்றுவிட்டு, அன்று சாயங்காலம் ஆட்டோவில் வீடு திரும்பினாள். வீட்டுக்கு வந்தவளுக்கு அம்மா துணி மாற்றிவிட போனார். அப்போது அவளது துணியெல்லாம் ரத்தம் இருந்ததை பார்த்து அதிர்ந்துவிட்டார். மேலும் உடம்பில் காயங்களும் இருந்தன. என்ன நடந்தது என்று மகளால் சொல்ல முடியாத நிலையில் கதறி அழுதார் தாய்.

    அழுகை-ஆத்திரம்

    அழுகை-ஆத்திரம்

    உடனடியாக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பார்த்துவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லவும் உறைந்து நின்றார் தாய். ஆத்திரமும், அழுகையுமாக தேனி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    போராட்டம்

    போராட்டம்

    ஆனால் வாய் பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த இந்த அநீதியை அறிந்து, பெற்றோர், உறவினர்கள் மாவட்ட எஸ்பி ஆபீஸ் முன்பு போராட்டத்தில் குதித்தனர். விஷயத்தை கேள்விப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெண்கள் விடுதலை கழகம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் விரைந்து வந்துவிட்டனர்.

    பரபரப்பு

    பரபரப்பு

    சிறுமியை நாசம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு அங்கு நிலவியது. இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து இது சம்பந்தமாக கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    English summary
    7 year old mentally challenged girl raped and Public Protest in Theni District Police Superintendents Office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X