தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரிலேயே வச்சு செய்த திமுக.. 18 வருடத்துக்கு பின் பெரியகுளத்தை இழந்தது அதிமுக!

Google Oneindia Tamil News

தேனி: பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளில் திமுக 13 தொகுதிகளிலும் அதிமுக 9 தொகுதிகளிலும் முன்னிலை மற்றும் வெற்றி பெற்றுள்ளன.

tamil nadu by election results 2019 live updates: dmk candidate leading in periyakulam constituency

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மயில்வேல் போட்டியிட்டார். திமுக சார்பில் சரவணக்குமார் போட்டியிட்டார்.

ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக ஒபிஎஸ்சின் சொந்த ஊரில் திமுக வேட்பாளர் முன்னிலை.. பின்னடைவில் அதிமுக

தற்போது 22வது (இறுதி) சுற்று முடிவுகளின் படி திமுக வேட்பாளர் சரவணக்குமார் 87 ஆயிரத்து 71 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மயில்வேல் 66 ஆயிரத்து 983 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார், அமமுக வேட்பாளர் கதிர்காமு 26 ஆயிரத்து 44 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார். நாம் தமிழர் சோபனா 6010 வாக்குகளும், மநீம வேட்பாளர் பிரபு - 5676 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர். நோட்டாவுக்கு 2387 வாக்குகள் விழுந்து இருந்தது.

இதில் அதிமுக வேட்பாளர் மயில்வேலைவிட திமுக வேட்பாளர் சரவணக்குமார் 20 ஆயிரத்து 88 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பெரியகுளம் தொகுதியை 18 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவிடம் இழந்துள்ளது அதிமுக.

கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..! கோவையில் பாஜக வெற்றியில் மண் அள்ளி போட்ட மநீம.. ஒன்றே கால் லட்சம் வாக்குகள்.. சபாஷ் கமல்..!

முன்னதாக திமுக சார்பில் மூக்கையா 1996ல் வெற்றி பெற்று இருந்தார். அதிமுக சார்பில் 2001-2011 வரை ஒபிஎஸ் இரண்டு முறை வென்றார். இடதுசாரிகள் ஒரு முறை வென்றுள்ளனர். அமமுக காதிர்காமு கடைசியாக அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தார்

English summary
tamil nadu by election results 2019 live updates: dmk candidate saravanakumarleading in periyakulam constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X