தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது ரவீந்திரநாத் அதுக்குள்ள எம்பியா.. கோயில் கல்வெட்டால் ஷாக் ஆன தங்கதமிழ்செல்வன் பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு- வீடியோ

    தேனி: தேனி குச்சனூர் கோயிலில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று உள்ள நன்கொடையாளர் கல்வெட்டை அகற்ற வேண்டும் என தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளரும், அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

    தேனியில் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தும், அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வனும் நீயா நானா என்ற போட்டியில் இருக்கிறார்கள்.

    எப்படி என்றால் தேனியில் ரவீந்திரநாத் வேட்பாளராக அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே டிடிவி தினகரனிடம் பேசி தானே தேனியில் போட்டியிடுவதாக, தங்கதமிழ்செல்வன் அறிவித்தார் என்றார் பார்த்துக்கொள்ளுங்கள்.

    இன்னும் பிள்ளையே பிறக்கலே.. அதுக்குள்ள பேர் வச்சாச்சா.. சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு! இன்னும் பிள்ளையே பிறக்கலே.. அதுக்குள்ள பேர் வச்சாச்சா.. சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு!

    நான் ராஜா?

    நான் ராஜா?

    இவர்கள் இவருக்கும் அப்படி ஒரு போட்டி என்று சொல்வதைவிட... சொந்த ஊரில் நீ ராஜாவா, நான் ராஜாவா என்று பார்த்திடுவோம் என்ற ரீதியில் ஓபிஎஸ்- தங்கதமிழ்செல்வன் இடையே மோதல் தான் இந்த போட்டிக்கு காரணம்.

    மக்களுக்கே தெரியலை

    மக்களுக்கே தெரியலை

    இதனால் தேனியில் எம்பியாவது என்பது இருவருக்குமே கவுரவ பிரச்னை என்ற ரீதியில் போட்டி கடுமையாக இருந்தது. மக்கள் யாருக்கு ஓட்டுப்போட்டார்கள் என்பது சுத்தமாக கண்டுபிடிக்க முடியாத நிலை அதிமுக அமமுக கட்சிகளுக்கே உள்ளது.

    தேனி எம்பி

    தேனி எம்பி

    இந்த நிலையில் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள காசி ஸ்ரீ அன்னபூரணி ஆலயத்திற்கு நன்கொடை கொடுத்தவர்கள் பெயர் படியலை கோயில் நிர்வாகம் கல்வெட்டாக பொறித்துள்ளது. அந்த கல்வெட்டில் துணை முதல்வர் ஒபிஎஸ் பெயருடன் , தேனி பாராளுமன்ற உறுப்பினர் o.p. ரவீந்திரநாத் என பொறிக்கப்பட்டள்ளது.

    தூக்குங்க கல்வெட்டை

    தூக்குங்க கல்வெட்டை

    ஆண்டிபட்டியில் இன்று பேட்டி அளித்த தங்கதமிழ்செல்வனிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் பதில் கேட்டனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், குச்சனூரில் தனியார் கோவிலில் ஓபிஎஸ் மகன் எம்பி என்று உள்ள கல்வெட்டை உடனே அகற்ற வேண்டும் என்றார். ரவீந்திரநாத் எம்பி என்று உள்ள நன்கொடையாளர் கல்வெட்டை அகற்ற துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    புதுவம்பு

    புதுவம்பு

    தங்கதமிழ்செல்வன் தேனியில் தான் தான் ஜெயிப்பேன் என உறுதியாக நம்பி வருகிறார். இதேபோல் தான் ரவீந்திராத் குமாரும் நம்பிக்கையுடன் உள்ளார். இதற்கிடேயில் ஆர்வக்கோளாறில் கோயில் நிர்வாகத்தினர்செய்த செயல் காரணமாக ஒபிஸ் மகன் இது என்னையா புதுவம்பாக இருக்கு என கடுப்பாகிவிட்டார். இதையடுத்து கோயில் கல்வெட்டில் இருந்த பெயர் தற்போது மறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கோயில் கல்வெட்டில் பொறித்தது உண்மையாகும் பட்சத்தில், நிச்சயம் பொறித்த கல்வெட்டு அப்படியே பிரம்மாண்டமாக திரும்ப வரும் என்பது உறுதி.

    English summary
    ops son op raveendranath as theni mp before election resultin kuchanur temple, but thanga tamilselvan ask remove the name from temple
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X