தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சி வெயில்.. கூலிங் கிளாஸ்.. தடபுடல் மாட்டு வண்டி ஊர்வலம்.. தேனியை மிரள வைத்த தங்க தமிழ்ச்செல்வன்

மாட்டு வண்டியில் சென்று தங்க தமிழ்செல்வன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Google Oneindia Tamil News

தேனி: உச்சி வெயிலில்.. கலக்கல் கூலிங் கிளாஸ் அணிந்து, மாட்டு வண்டியில் ஏறி சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார் தங்க தமிழ்செல்வன்!

தமிழகம் முழுவதும் அமமுக வேட்பாளர்கள் இன்றுதான் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 2 மணியிலிருந்து 3 மணிக்குள் எல்லோரும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட வேண்டும் என்பது உத்தரவு!

அதன்படி, தேனியில் தங்க தமிழ்செல்வன், மதுரையில் டேவிட் அண்ணாதுரை, திண்டுக்கல்லில் ஜோதிமுத்து, தஞ்சையில் பொன் முருகேசன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் தினகரனின் வலதுகரமாகி விட்ட தங்கதமிழ்செல்வன், மாட்டு வண்டி கட்டிக் கொண்டு புறப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்... கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 6 பேர் பரிதாப பலிஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்... கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 6 பேர் பரிதாப பலி

அமமுக கொடிகள்

அமமுக கொடிகள்

வேட்டி-சட்டை, கூலிங் கிளாஸ் சகிதம் அணிந்து கொண்டு மாட்டு வண்டியில் ஏறிக் கொண்டார். அவருடன் ஆதரவாளர்களும் ஏறி சூழ்ந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் அமமுக கொடிகள் பறக்கின்றன. கூடவே எஸ்டிபிஐ கொடியும் சேர்ந்து பறக்கிறது.

உச்சி வெயில்

உச்சி வெயில்

மாட்டு வண்டியின் சைடுவாக்கில், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் படங்களுடன் தங்க தமிழ்செல்வன் படமும் ஒட்டப்பட்டிருக்கிறது. மாட்டு வண்டிக்கு முன்னாலும், பின்னாலும் ஆதரவாளர்கள் திரண்டு வர உச்சி வெயிலில் ஊர்வலம் புறப்பட்டது.

விசில் சத்தம்

விசில் சத்தம்

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து புறப்பட்ட மாட்டு வண்டி ஊர்வலத்தால் நெடுஞ்சாலை முழுவதும் டிராபிக் ஜாம் ஆகி பஸ்கள் வரிசை கட்டி நின்றன. இதனிடையே விசில் சத்தம் நெடுஞ்சாலையில் இருந்து பறந்து வருகிறது.

மனுதாக்கல்

மனுதாக்கல்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடைசூழ, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பல்லவி பல்தேவ்விடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தங்கதமிழ்செல்வன்!

English summary
AMMK Theni Constitution Candidate Thanga Tamilselvan nomination filed today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X